தூக்கத்திலேயே உயிரிழந்த ”ராக்கி” புகழ் நடிகர்!

அமெரிக்காவில் ராக்கி பட புகழ் நடிகர் கார்ல் வெதர்ஸ் தனது 76வது வயதில் காலமானார்.

கார்ல் வெதர்ஸ்
ஹாலிவுட்டில் 1973ஆம் ஆண்டில் வெளியான Magnum Force படத்தில் அறிமுகமானவர் கார்ல் வெதர்ஸ் (Carl Weathers).

இவர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் ‘ராக்கி’ பட சீரிஸின் 4 பாகங்களிலும் நடித்து புகழ்பெற்றார். அதேபோல் அர்னால்டு ஸ்வார்ஸினேகர் உடன் பிரிடேட்டர் படத்தில் நடித்த கார்ல், 2014ஆம் ஆண்டுவரை திரைப்படங்களில் நடித்திருத்தார்.

2019ஆம் ஆண்டில் வெளியான Toy Story 4 அனிமேஷன் படத்தில் கார்ல் வெதர்ஸ் பின்னணி குரல் கொடுத்திருந்தார்.

அதன் பின்னர் 2019 முதல் 2023ஆம் ஆண்டு வரை The Mandalorian தொடரில் நடித்திருந்தார்.

தூக்கத்தில் இறப்பு
இந்த நிலையில் 76 வயதான கார்ல் வெதர்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் தூக்கத்திலேயே இறந்துவிட்டதாக, அவரது மேலாளர் Matt Luber அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”கார்ல் ஒரு அசாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்த ஒரு விதிவிலக்கான மனிதர். திரைப்படம், தொலைக்காட்சி, கலை மற்றும் விளையாட்டு ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பின் மூலம், அவர் ஒரு அழியாத முத்திரையை பதித்துள்ளார்.

அத்துடன் உலகம் முழுவதும் மற்றும் தலைமுறைகள் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டார். அவர் ஒரு அன்பான சகோதரர், தந்தை, தாத்தா, பார்ட்னர் மற்றும் நண்பர்” என இரங்கல் பதிவை வெளியிட்டார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *