அமெரிக்காவின் இரகசிய உளவுத்துறை தரவுகளை வெளியிட்ட அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை
அமெரிக்காவின் இரகசிய உளவுத்துறை தரவுகளை வெளியிட்ட முன்னாள் சிஐஏ (CIA) அதிகாரிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் அட்டர்னி ஜெனரல் அலுவலகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Joshua Schulte என்ற இந்த அதிகாரி, 2016-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளத்திற்கு CIA இரகசியத் தகவல்களின் பெரும் தொகையை வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய சைபர் மென்பொருள்
இந்த செயல் அமெரிக்க உளவுத்துறை வரலாற்றில் மிகப்பெரிய தரவு கசிவு குற்றமாக கருதப்படுகிறது.
நாட்டின் அட்டர்னி ஜெனரல் அலுவலகத்தின்படி, குழந்தை ஆபாசப் படங்களைப் பெறுதல், வைத்திருத்தல் மற்றும் விநியோகித்தல் உள்ளிட்ட பல குற்றங்களில் அவர் குற்றவாளியாக கருதப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிஐஏவின் (CIA) சைபர் நுண்ணறிவு பிரிவில் கணினி பொறியாளராக பணிபுரிந்த அவர், கணினியால் கண்டறியப்படாமல் தகவல்களை திருடக்கூடிய புதிய சைபர் மென்பொருளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.