உலகின் மிக சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல்… இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

2024 US நியூஸ் பவர் தரவரிசையின்படி, அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடாக உள்ளது. சீனா அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் பொருளாதார செல்வாக்கு காரணமாக இரண்டாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
தலைமைத்துவம், பொருளாதாரம் மற்றும் அரசியல் செல்வாக்கு, சர்வதேச கூட்டணிகள் மற்றும் இராணுவ பலம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைகள் ஒரு ஆற்றல்மிக்க சக்தியை உலகமெங்கும் வெளிப்படுத்துகின்றன. தொழில்நுட்பம், நிதி மற்றும் பொழுதுபோக்கு போன்ற பல்வேறு துறைகளில் அதன் வலுவான செயல்பாட்டின் காரணமாக அமெரிக்கா முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், AI மற்றும் 5G-ல் சீனாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வலிமை, விரிவடைந்து வரும் பொருளாதார செல்வாக்கு என அந்நாட்டை முன்னணி இடத்திற்கு தள்ளுகிறது.
புவிசார் அரசியல் செல்வாக்கு மற்றும் இராணுவ வலிமைக்கு பெயர் பெற்ற ரஷ்யா, மூன்றாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தின் சாம்பியனான ஜெர்மனி, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இங்கிலாந்து மற்றும் தென் கொரியா முறையே ஐந்தாம் மற்றும் ஆறாவது இடங்களைப் பிடித்துள்ளன. பிரான்ஸ், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் பசுமை ஆற்றலுக்கு முன்னுரிமை அளித்து, ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கிறது.
மேம்பட்ட சிப் உற்பத்தி, AI மற்றும் மின்சார வாகன தொழில்நுட்பம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற ஜப்பான், எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான மற்றும் எண்ணெய் உற்பத்தியில் முக்கிய நாடான சவுதி அரேபியா ஒன்பதாவது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியாவை தொடர்ந்து UAE, 10வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்யும் இந்தியா:
இந்தியா 12வது இடத்திற்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் குறிக்கிறது. வலுவான பொருளாதாரம், வலுவான கூட்டணிகள் மற்றும் ஈர்க்கக்கூடிய இராணுவ சக்தி ஆகியவை அதன் வளர்ந்து வரும் உலகளாவிய அந்தஸ்துக்கு பங்களிக்கின்றன. அதுமட்டுமின்றி, இந்தியா உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)-யின் அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.