பரிசாக கிடைத்த கோள மீனை சாப்பிட்டு உயிரிழந்த 46 வயது நபர்!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த 46 வயதே ஆன மேக்னோ செர்ஜியோ கோமஸ் என்ற நபர், விஷம் வாய்ந்த கோள மீனை (puffer fish) சாப்பிட்டு உயிரிழந்த செய்தி அவரது குடும்பதை மட்டுமல்லாமல் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முன் என் சகோதரன் கோள மீனை வாங்கியதையோ சுத்தப்படுத்தியதையோ நான் பார்த்ததேயில்லை எனக் கூறுகிறார் இறந்து போன கோம்ஸின் சகோதரி மைரியான் கோமஸ்.

உயிரையை கொல்லக் கூடிய இந்த கடல் உணவு, பெயர் தெரியாத நண்பர் ஒருவரால் மேக்னோவிற்கு பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதனாலேயே இந்த மீன் எங்கிருந்து கிடைத்தது மற்றும் இதன் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதற்கு முன் கோள மீனை சாப்பிட்ட அனுபவம் இல்லையென்றாலும், மேக்னோவும் அவரது நண்பரும் மீனின் உடலை கிழித்து அதன் குடலை வெளியே எடுத்துவிட்டு, அதை அப்படியே வேக வைத்து சிறிது லெமன் ஜூஸ் பிழிந்து சாப்பிட்டனர். கோள மீன் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே மேக்னோ மற்றும் அவரது நண்பரின் உடல்நிலை கவலைக்கிடமானது.

தனது வாய் முழுதும் மறத்துப் போவதாக கூறியுள்ளார் மேக்னோ. உடல்நிலை மோசமாவதை உணர்ந்த உறவினர்கள் உடனடியாக மேக்னோவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும், அங்கு சென்றதும் அவர் உடல் முழுவதும் உணர்ச்சிகள் இன்றி காணப்பட்டது. இது போதாதென்று அடுத்த எட்டு நிமிடங்களுக்கு மாரடைப்பால் அவதிப்பட்டார் மேக்னோ.கோள மீனின் குடல் மற்றும் பாலுறுப்பில் இருக்கும் டெட்ரோடோ டாக்ஸின் என்ற விஷத்தின் விளைவால் தான் மேக்னோ இறந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த மீனில் இருக்கும் விஷம் சயனைடை விட ஆயிரம் மடங்கு விஷத்தன்மை நிறைந்தது. இது நம் தசைகளில் உள்ள நரம்புகள் மூலம் உடல் முழுவதும் பரவி நம் கை கால்களை முடக்குவதோடு உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது.

மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும் 35 நாட்கள் கழித்து உயிரிழந்தார் மேக்னோ. மீனில் உள்ள விஷம் இவரது ஒட்டுமொத்த உடலையும் முடக்கியதோடு கடைசி கட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு மூளையை கடுமையாக பாதித்தது. இதில் அதிசயம் என்னவென்றால், மேக்னோவின் நண்பர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துவிட்டார். ஆனால் அவரது நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் எழுந்து நடமாட முடியாமல் உள்ளதாகவும் சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பச்சையான கோள மீனை ஜப்பானில் ஃபுகு என அழைக்கிறார்கள். அங்கு இந்த மீன் மிகவும் சுவையான உணவாக கருதப்படுகிறது. ஆனால் இதிலுள்ள விஷத்தன்மை காரணமாக உரிமம் பெற்ற சமையல் கலைஞர்கள் மட்டுமே இந்த மீனை சமைப்பதற்கு ஜப்பானில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் 50 பேராவது இந்த மீனை சாப்பிட்டு விஷமேறி சிகிச்சை பெறும் சம்பவமும் ஜப்பானில் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் இதெல்லாம் அனுபவம் இல்லாத நபர்கள் சமைப்பதாலோ அல்லது சாப்பிடுவதாலோ ஏற்படக் கூடியது என சாதாரணமாக கூறுகிறார்கள்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *