ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்கப்படுமா ? அமைச்சரின் பதில்..!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரிசி விலை கிலோ ரூ. 12 வரையிலும் உயர்த்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் பொதுவாக அறுவடை காலமான ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் தான் அரிசியின் விலை குறையும்.
ஆனால், இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தொடர்ந்து அரிசியின் விலை அதிகரித்து வருகிறது. நெல் விளைச்சல் குறைவாக இருக்கும் நிலையில் அரிசியின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வணிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அரிசியின் விலை உயர்ந்து வரும் நிலையிலும் தமிழக ரேஷன் கடைகளில் தற்போது வரையிலும் அரிசி தட்டுப்பாடு எதுவும் இல்லை என அமைச்சர் பெரிய கருப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதனால், வழக்கம் போல ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.