Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – பிப்ரவரி 03, 2024 – சனிக்கிழமை

மேஷம்:

உங்கள் தனிப்பட்ட உறவுகளில் இன்று நல்லிணக்கம் மற்றும் அமைதியை எதிர்பார்க்கலாம். உங்கள் அன்புக்குரியவர்களை நேசிக்கவும், பாராட்டவும் நேரம் ஒதுக்குங்கள். நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிக்க உங்களின் உற்சாகம் மற்றும் ஆற்றல் உதவும். உங்களுக்கான நிதி ஆதாயங்கள் இன்று அதிகரிக்கும். உங்கள் நண்பர்களுடன் பிணைப்பை வலுப்படுத்துங்கள்.

ரிஷபம்:

உங்கள் உறவுகளை வலுப்படுத்த இன்று நீங்கள் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டிய நாள். நேர்மையான மற்றும் வெளிப்படையான உரையாடல்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் நெருக்கத்தை அதிகரிக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளிடம் பொறுமையாக இருங்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைய ஒத்துழைப்பு மற்றும் குழுப்பணியில் கவனம் செலுத்துங்கள். புதிய முதலீட்டு முடிவுகளை எடுக்கும் முன் முழுமையாக ஆய்வு செய்யுங்கள்.

மிதுனம்:

உங்களது நடத்தை இன்று வெற்றிகரமான உறவுகளுக்கு அவசியமானதாக இருக்கும். எனவே பாசம், அன்பு மற்றும் அமைதியை கடைபிடியுங்கள். விரைவாக எதையும் கற்றுக்கொள்ளும் திறன் இன்று உங்களது வளர்ச்சியை உறுதிப்படுத்தும். சிரமமின்றி சவால்களைச் சமாளிக்க உங்களை சூழலுக்கு ஏற்றார் போல் மாற்றி கொள்ளுங்கள்.

கடகம்:

உறவுகளுக்குள் அக்கறை மற்றும் பாசத்தை வெளிப்படுத்துங்கள். முக்கியமான முடிவுகளை தனியாக எடுக்க நேர்ந்தால் உங்கள் விவேகத்தை பயன்படுத்துங்கள். பணவரவு இருக்கும் என்றாலும் அதிக செலவு செய்வதைத் தவிர்த்து, சேமிப்பு அல்லது புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். நீண்ட நாட்கள் கழித்து பழைய நண்பர்களை சந்தித்து மகிழ வாய்ப்பு அமையும். அவசர முடிவுகளை எடுக்கும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.

சிம்மம்:

தம்பதியர் தங்கள் வாழ்க்கை துணையிடம் தங்களுக்குள் இருக்கும் அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்த வேண்டும். பணியிடத்தில் உங்கள் தலைமைத்துவ திறன்கள் பிரகாசிக்கும், மற்றவர்களுக்கு ஒரு ஊக்கமாக இருப்பீர்கள். எதிர்வரும் சவால்களை நம்பிக்கையுடன் ஏற்று கொள்ளுங்கள். ஆர்வமுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். இன்று மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.

கன்னி:

உங்கள் உறவுகளில் இன்று புரிதலில் கவனம் செலுத்துங்கள். துணையிடம் உங்கள் தேவைகளை வெளிப்படுத்துங்கள் மற்றும் அவரின் தேவைகளுக்கும் முன்னுரிமை கொடுங்கள். வெற்றி பெற இன்று உங்கள் இலக்குகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள் மற்றும் தேவையற்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும். உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள்.

துலாம்:

உறவுகளுக்குள் இருக்கும் மோதல்களைத் தீர்க்க வெளிப்படையான மற்றும் நேர்மையான பேச்சு வார்த்தைகளில் ஈடுபடுங்கள். வேலை செய்யும் இடத்தில் உள்ள அனைவருடனும் ஒத்துழைத்து, ராஜதந்திர அணுகுமுறையை பேணுங்கள். உங்களது கையிருப்பை இன்று புத்திசாலித்தனமாக நிர்வகிக்கவும். இல்லை என்றால் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதற்கான சாத்தியத்தை காண்பீர்கள்.

விருச்சிகம்:

இன்று உங்களது அன்புக்குரியவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்துங்கள். தடைகளை சமாளித்து எடுத்த காரியத்தை முடிக்க உள் வலிமை மற்றும் மனஉறுதியை வளர்த்து கொள்ளுங்கள். சுய பாதுகாப்பு மற்றும் உணர்ச்சி நல்வாழ்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

தனுசு:

உங்கள் அன்புக்குரியவர்களுடன் இன்று உற்சாகமான செயல்களில் ஈடுபட திட்டமிடுங்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து செல்வதால் உறவு வலுவாகும். எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வது இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றியைத் தரும். நிதி விவகாரங்களைக் கையாள்வதில் எச்சரிக்கை தேவை.

மகரம்:

உங்கள் உறவுகளில் விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துங்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்திற்கு முன்னுரிமை அளித்து அதற்கான முயற்சிகளில் இறங்குங்கள். உங்கள் கடின உழைப்பும் விடாமுயற்சியும் நீங்கள் எதிர்பார்க்கும் சாதகமான பலன்களைத் தரும். உங்களது நட்பு வட்டத்தில் இணைவதன் மூலம் உற்சாகம் காண்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தொழில் வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை பேண முயற்சிக்கவும்.

கும்பம்:

உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் மோதல் ஏற்படுவதை தவிர்க்க அவர்களின் கண்ணோட்டத்திற்கு மதிப்பு கொடுங்கள். உங்களுக்கு சாதகமான பலன்களை பெற வழக்கத்தை விட புதுமையாக சிந்திப்பதற்கு கவனம் செலுத்துங்கள். உங்கள் தனித்துவமான யோசனைகள் வெற்றிக்கு வழிவகுக்கும். உங்கள் மனதை உற்சாகமாக வைக்கும் செயல்களில் ஈடுபடுவதன் மூலம் மன நலத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்.

மீனம்:

உறவுகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் போது இன்று உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். உங்களது படைப்பாற்றல் உங்களுக்கான வாய்ப்புகளை கொண்டு வந்து சேர்க்கும். பொருளாதார வளர்ச்சி இருந்தாலும் சேமிப்பு மற்றும் நீண்ட கால நிதி பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள். உங்களிடம் வந்து உதவி கேட்போருக்கு ஆதரவு கரம் கொடுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *