மாணவர்களே ரெடியா ? இன்று `கேட்’ தேர்வு தொடக்கம்..!
பொறியியல் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்காக தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) தற்போது வெளியிட்டு உள்ளது.இந்நிலையில், இந்த தேர்வானது இன்று (பிப்.3) முதல் தொடங்க இருக்கிறது.
பிப். 4, பிப். 10 மற்றும் பிப். 11 தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை gate2024.iisc.ac.in என்ற இந்திய அறிவியல் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த தேர்வு இரண்டு ஷிப்டுகளில் மூன்று மணி நேரம் நடைபெறும். காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், பிற்பகல் 2:30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரையும் இந்த தேர்வு நடைபெற இருக்கிறது.
தேர்வு முடிவு மார்ச் 16-ம் தேதி வெளியிடப்பட்டு, மதிப்பெண் அட்டைகளை அதே மாதம் 23-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது