தீயிடப்பட்ட கனேடிய தமிழ் காங்கிரஸ்! பின்னணியில் இமாலயப் பிரகடனமா..!
உலகத்தமிழ் பேரவையில் அங்கம் வகிக்கும் கனேடிய தமிழ் காங்கிரஸ் பணியகம் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் இமாயலப்பிரகடனமும் காராணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 27.01.2024 ஆம் திகதி கனடாவிலுள்ள கனேடிய தமிழ் காங்கிரஸ் பணியகம் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கனேடிய தமிழ் காங்கிரஸ் கண்டன செய்தி ஒன்றையும் வெளியிட்டிருந்தது.
குறிப்பாக இலங்கையில் முன்வைக்கப்பட்டிருந்த இமாலயப்பிரகடனத்திற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ்வழங்கிய ஆதரவை மையப்படுத்தி புலம்பெயர் தமிழ் சமுகத்திடமிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்பே இந்த சம்பவத்தின் பின்னணியாக இருக்கும் என கருதப்படுகிறது.