அணு ஆயுத போர் வெடித்தால்… அமெரிக்காவில் எந்த பகுதியில் குடியிருந்தால் தப்பலாம்: விரிவான தகவல்
மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஹமாஸ் மற்றும் ரஷ்யா – உக்ரைன் போர் என உலக வல்லரசு நாடுகள் பல ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துவரும் நிலையில், ஆணு ஆயுத போர் வெடிக்கும் சூழலும் அதிகரித்தே வருகிறது.
மறுபரிசீலனை செய்து வருவதாக
இந்த நிலையில், அமெரிக்காவில் வீடு வாங்கும் திட்டத்துடன் இருக்கும் சிலர், தற்போது தங்கள் தெரிவு செய்துள்ள பகுதியை மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அத்துடன், அணு ஆயுத போர் வெடித்தால், தப்பித்துக்கொள்ள வாய்ப்பான பகுதி எதுவென்பதையும் சில நிபுணர்கள் தரப்பு வெளியிட்டுள்ளனர். அதாவது மிதமான காலநிலை, குடிநீர் மற்றும் விவசாய நிலங்களை பராமரிக்க சாதகமான கிராமப்புற பகுதிகளை மக்கள் தற்போது தெரிவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஜனத்தொகை மிகுந்த, போக்குவரத்து நெருக்கடி கொண்ட பகுதிகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பொதுவாக குடியிருப்பு வாங்க முடிவு செய்தால், அந்த மாவட்டத்தில் கல்வியின் தரம், அங்காடிகள் அருகாமையில் உள்ளனவா, பொது போக்குவரத்து குறித்தும் ஆய்வு செய்த பின்னர் குடியிருப்பை வாங்க முடிவு செய்வார்கள், ஆனால் தற்போது காலநிலை, உணவு மற்றும் குடிநீர் தேவைகள் முதன்மை காரணிகளாக பார்க்கின்றனர்.
குடியிருப்பு வாங்க முயற்சிக்கலாம்
அமெரிக்காவில் San Francisco, Miami மற்றும் Houston ஆகிய பகுதிகளே மக்களின் தற்போதைய தெரிவாக உள்ளது. மட்டுமின்றி, Arkansas, Illinois, Iowa, Kentucky, Louisiana, Minnesota, Mississippi, Missouri, Tennessee மற்றும் Wisconsin ஆகிய பகுதிகளிலும் குடியிருப்பு வாங்க முயற்சிக்கலாம் என கூறியுள்ளனர்.