Pak vs Aus – அல்வா கேட்சை மிஸ் செய்த பாக். வீரர்கள்.. டேவிட் வார்னர் படைத்த வரலாற்று சாதனை

பாகிஸ்தானுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் இரண்டு ரன்களில் இருந்த போது கொடுத்த அல்வா கேட்ச் வாய்ப்பை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்டனர்.

இதை பயன்படுத்தி அவர் வரலாற்று சாதனையை படைத்தார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டேவான இன்று மெல்போர்ன் நகரில் நடைபெற்றது.

இதில், ஆஸ்திரேலியாவும் பாகிஸ்தானும் பல பரிட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து முதல் போட்டியில் சதம் அடித்த டேவிட் வார்னர் இரண்டாவது போட்டியில் இரண்டு ரன்கள் எடுத்திருந்தபோது ஷாகின் ஆப்ரிடி பந்துவீச்சில் எளிதான ஒரு கேட்சை கொடுத்தார். ஆனால் அதை ஸ்லிப்பில் நின்ற பாகிஸ்தான் வீரர் அப்துல்லா ஷபிக் தவற விட்டார். இது பாகிஸ்தான் ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்தது.

இதனை அடுத்து டேவிட் வார்னர் 83 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் டேவிட் வார்னர் ஒரு வரலாற்று சாதனையை படைத்திருக்கிறார். அதாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னர் தற்போது இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்பு ஸ்டீவ் வாக் அந்த இடத்தில் இருந்த நிலையில் தற்போது டேவிட் வார்னர் முறியடித்து இருக்கிறார்.

667 இன்னிங்ஸில் விளையாடி 27,368 ரப்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், டேவிட் வார்னர் 480 இன்னிங்சில் விளையாடி 18502 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் ஸ்டீவ் வாக் 548 இன்னிங்சிக் 18,496 ரன்கள் அடித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர். ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆலன் பார்டர் 517 இன்னிங்ஸில் விளையாடி 17698 ரன்கள் எடுத்து நான்காவது இடத்திலும் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 449 இன்னிங்ஸில் விளையாடி 17112 ரன்கள் எடுத்து ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். டேவிட் வார்னர் குறித்து பல்வேறு கருத்துக்களை மிட்செல் ஜான்சன் கூறி வந்த நிலையில் தற்போது டேவிட் வார்னர் வரலாற்று சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *