விஜய்யின் அரசியல் வருகை.. பல கோடி நஷ்டத்தை சந்திக்கப்போகும் முக்கிய நபர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தான், உச்ச நட்சத்திரமாக இருக்கும் நேரத்திலேயே அரசியலில் களமிறங்கி இருக்கிறார்.
தமிழக வெற்றி கழகம் என தனது அரசியல் கட்சி பெயரையும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதுவரை விஜய் மக்கள் இயக்கமாக செயல்பட்ட வந்த நிலையில், இனிமேல் தமிழக வெற்றி கழகம் என செயல்படும் என அக்கட்சியின் தொண்டர்கள் கூறி வருகிறார்கள்.
இதுவரை கமிட் செய்யப்பட்டுள்ள படங்களை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் களமிறங்குவேன் என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் கூறியுள்ளார். விஜய்யின் அரசியல் என்ட்ரி வரவேற்பை பெற்று இருந்தாலும், விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளது. அதே போல் விஜய்யின் என்ட்ரி சினிமா திரையரங்க உரிமையாளர்களுக்கு பாதிப்பையும் ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நஷ்டத்தை சந்திக்கப்போகும் முக்கிய நபர்கள்
திரையரங்கங்களுக்கு பண்டிகை என்றால் அது ரஜினி, விஜய், அஜித் படங்கள் தான். இதில் முக்கியமானவராக இருக்கும் விஜய் அரசியலில் களமிறங்குவதன் காரணமாக சினிமாவில் இருந்து விலகுகிறார்.
இதனால் கண்டிப்பாக இனி வரும் காலங்களில் திரையரங்க உரிமையாளர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படும் என திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.