கார்த்தி 25.. கவுரவப்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர்களை.. வழங்கப்பட்ட 1 கோடி ரூபாய் நிதி – முழு விவரம்!

வெளிநாட்டிற்கு சென்று தனது பட்டப் படிப்பை முடித்த பிரபல நடிகர் கார்த்தி அவர்கள், இயக்குனர் மணிரத்தினம் அவர்களுடன் ஓரிரு திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி, அதன் பிறகு அமீர் அவர்களுடைய “பருத்திவீரன்” திரைப்படத்தின் மூலம் கதையின் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ச்சியாக பல நல்ல திரைப்படங்களில் அவர் நடித்து வருகிறார். அவருடைய திரை வாழ்க்கை ஒருபுறம் இருக்க, பல சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார் கார்த்தி. தற்பொழுது 46 வயதாகும் நடிகர் கார்த்தி, அவருடைய 31வது பிறந்த நாளன்று “மக்கள் நல மன்றம்” என்கின்ற ஒரு புதிய முன்னெடுப்பை துவங்கி, தனது ரசிகர்களை சமூக சேவைகளின் ஈடுபட அவர் ஊக்கப்படுத்தி வருகிறார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் கொடுப்பது, ரத்ததானம் செய்வது, பெண்களுக்கு தையல் மெஷின் வாங்கிக் கொடுப்பது, வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பைகள் வாங்கிக் கொடுப்பது போன்ற பல முன்னெடுப்புகளை அவர் நடத்தி வருகிறார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் சிறப்பாக பல விஷயங்களை செய்து வருகிறார் கார்த்தி.

சில வருடங்களுக்கு முன்பு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சுமார் 72 ஆயிரம் ரூபாய் செலவில் விலங்குகளை பராமரிக்க அவர் ஒரு முன்னெடுப்பை எடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கார்த்தி 25 என்ற நிகழ்ச்சி தற்பொழுது நடைபெற்று இருக்கிறது. இதில் சமூக செயல்பாட்டாளர்கள் 25 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 25 லட்சம் ரூபாய் அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் கார்த்தி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்று அவர்களுக்கு அந்த பரிசு தொகையை வழங்கி உள்ளார். மேலும் பல்வேறு சமூக சேவை நடவடிக்கைகளுக்காக அவர் ஒரு கோடி ரூபாயை அன்பளிப்பாக வழங்கி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *