50MP கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி… சூப்பர் அம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ள Spark 20 மொபைல்!

பிரபல சீன ஸ்மார்ட் ஃபோன் பிராண்ட்டான டெக்னோ (Tecno) அதன் ஸ்பார்க் சீரிஸில் ஸ்மார்ட் ஃபோன் லைன்அப்பில் புதிய மொபைலை சேர்த்துள்ளது. சமீபத்தில் இந்தியாவில் அதன் புதிய மொபைலான Spark 20-ஐ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் நிறுவனம் இந்த புதிய Tecno Spark 20 மொபைலை உலகளவில் வெளியிட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவில் இந்த மொபைலை அறிமுகப்படுத்தி இருக்கிறது டெக்னோ நிறுவனம். ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான HiOS 13-ல் இயங்கும் இந்த மொபைலின் விலை விவரம் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

விலை எவ்வளவு?

இந்த புதிய மொபைலின் விலை இந்தியாவில் ரூ.10,499-ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிரபல இ-காமர்ஸ் பிளாட்ஃபார்மான அமேசான்-ல் இன்று முதல் (பிப்ரவரி 2) விற்பனைக்கு வந்திருக்கிறது. சைபர் ஒயிட், கிராவிட்டி பிளாக், மேஜிக் ஸ்கின் 2.0 (ப்ளூ) மற்றும் நியான் கோல்டு உள்ளிட்ட கலர் ஆப்ஷன்கள் கிடைக்கிறது. மேலும் Tecno Spark 20 மொபைலை வாங்கும் யூஸர்கள் ​​OTTplay-ன் இலவச வருடாந்திர சந்தாவை பெறலாம். இதன் மதிப்பு ரூ.4,897 ஆகும். இந்த சலுகை மூலம், SonyLIV, Zee5, Lionsgate Play மற்றும் Fancode போன்ற 19 பிரபல OTT பிளாட்ஃபார்ம்களை யூசர்கள் இலவசமாக அணுக முடியும்.

ஸ்பெசிஃபிகேஷன்கள் என்னென்ன?

இந்த மொபைல் 90Hz ரெஃப்ரஷ் ரேட்டுடன் கூடிய 6.6-இன்ச் HD+ LCD ஸ்கிரீனை கொண்டுள்ளது. இதன் சிறந்த செயல்திறனுக்காக MediaTek Helio G85 SoC ப்ராசஸர் கொடுக்கப்பட்டுள்ளது. இது 8GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது. மெமரி ஃப்யூஷன் டெக்னாலஜி இதில் உள்ளதால் ரேமை 16GB வரை நீட்டித்து கொள்ள முடியும். மைக்ரோ SD கார்ட் ஸ்லாட் வழியாக 1TB வரை ஸ்டோரேஜை விரிவாக்கி கொள்ளலாம்.

கேமரா அம்சங்களை பொறுத்த வரை Tecno Spark 20 மொபைலின் பின்பக்கம் 50-மெகாபிக்சல் பிரைமரி கேமரா, AI லென்ஸ் மற்றும் டூயல் ஃபிளாஷ் லைட் கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்ஸ்களுக்காக இந்த்ஸ் மொபைலின் முன்பக்கம் ஹோல்-பஞ்ச் ஸ்லாட்டில் 32-மெகாபிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆப்பிளின் ஐபோன்களில் இருக்கும் Dynamic Island அம்சத்தை போலவே செயல்படும் டெக்னோவின் டைனமிக் போர்ட் சாஃப்ட்வேர் அம்சம் இந்த மொபைலில் கிடைக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 20 மொபைலானது 18W வயர்டு சார்ஜிங் சப்போர்ட்டுடன் கூடிய 5,000எம்ஏஎச் பேட்டரிபேக் கொண்டுள்ளது. USB டைப்-சி போர்ட் இதில் உள்ளது. 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ -வும் உள்ளது. மேலும் இந்த மொபைல் 4G, Wi-Fi, GNSS மற்றும் ப்ளூடூத் 5.2 உள்ளிட்ட கனெக்டிவிட்டி சப்போர்ட்டை கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக சைட்-மவுண்ட்டட் ஃபிங்கர் பிரின்ட் சென்சாரை கொண்டுள்ள இந்த மொபைல் டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டென்ஸிற்கான IP53 ரேட்டிங்கை பெற்றுள்ளது. மேலும் டூயல் ஸ்பீக்கர்கஸ், DTS ஆடியோ, மேஜிக் ஸ்கின் 2.0 ப்ளூ கலர் லெதர் போன்றவற்றையும் கொண்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *