ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களை குறிவைத்து வான்வழி தாக்குதல்: அமெரிக்கா அதிரடி
ஈரான், சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க படைத்தளம் மீது கடந்த மாதம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
சிரியாவின் எல்லை அருகே அமைந்துள்ள படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க இராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்திருந்ததுடன், மேலும், 40 பேர் படுகாயமடைந்திருந்தனர்.
அமெரிக்கா அதிரடி
இந்த தாக்குதலை சிரியாவில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்கள் நடத்தியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்நிலையில், ஈராக், சிரியா மீது அமெரிக்கா நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
ஆளில்லா விமான தாக்குதல்
இதன்போது 85 இலக்குகள் மீது 125 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியா, ஈராக்கில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குழுக்களின் கட்டுப்பாட்டு மையங்கள், ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், ஆயுத சேமிப்பு கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.