கனடாவில் குறிவைக்கப்படும் தெற்காசிய மக்கள்
கனடாவில் தெற்காசிய மக்களை இலக்கு வைத்து குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிசான் துரையப்பா இது தொடர்பிலான அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளார்.
குறுஞ்செய்திகள் ஊடாக கப்பம்
கனடா முழுவதிலும் இவ்வாறு தெற்காசிய மக்களின் வர்த்தக நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதோடு தெற்காசிய வர்த்தகர்களிடமிருந்து கப்பம் கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக கப்பம் கோரப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான கப்பம் கோரல்கள் தொடர்பில் 20 நிறுவனங்கள் முறைப்பாடு செய்துள்ளன. மேலும் கப்பம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்த நிறுவனங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.