பாஜக உடன் கூட்டணி இல்லை.. உறுதியாக சொன்ன எடப்பாடி பழனிச்சாமி.. விசிலடித்த நிர்வாகிகள்

பாஜக உடன் எப்போது கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் உறுதியாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிமுக நிர்வாகிகள் பலரும் கை தட்டி ஆராவாரம் செய்தனர்.

அரங்கில் இருந்த பலரும் உற்சாகத்தில் நடனமாடினர்.

அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அதிமுகவினர் பாடுபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிமுக பாஜக கூட்டணி முறிந்த பிறகு நடைபெற்ற கூட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. இன்றைய தினம் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

தொண்டர்களின் எதிர்பார்ப்பு பொய்யாகவில்லை. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மாநில அரசை மட்டுமல்லாது மத்தியில் ஆளும், ஆண்ட அரசுகளையும் விமர்சனம் செய்தார். பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளை நம்பி பிரயோஜனம் இல்லை. மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரண்டு கட்சிகளுமே தமிழக மக்களுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கின்றன.

பாஜக உடனான கூட்டணியில் இருந்து விலகிய பிறகு ஸ்டாலினுக்கு தூக்கம் போய் விட்டது. சிறுபான்மை மக்களின் வாக்கு சிதறிவிடும் என்ற அச்சத்தில் புலம்பி வருகிறார் ஸ்டாலின். பாஜக உடன் எப்போதும் கூட்டணி இல்லை என்று நாங்கள் தெளிவுபடுத்தி விட்டோம் என்று கூறினார் எடப்பாடி பழனிச்சாமி.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று உறுதியாக அழுத்தம் திருத்தமாக எடப்பாடி பழனிச்சாமி கூறியவுடன் கூட்ட அரங்கத்தில் இருந்த நிர்வாகிகள் பலரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர். சிலர் விசிலடித்தும் உற்சாக மிகுதியில் நடனமாடினர். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் அதிமுக 40 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது.

இதற்கு அச்சாரமாக 2013ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய ஜெயலிதா செங்கோட்டையை நோக்கி எக்ஸ்பிரஸ் கிளம்பி விட்டது என்று கூறினார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியா? லேடியா என்று பிரச்சாரம் செய்தார். அதே பாணியில் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் களமிறங்கப்போகிறது அதிமுக. ஜெயலலிதா போல வெற்றி பெற்று சாதனை படைப்பாரா பார்க்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *