அடுத்த கமல்ஹாசன் என புகழப்பட்ட நடிகர்.. ஆனால் இன்று…. சினிமாவில் காணாமல்போன காஜா ஷெரீப்..
1980 களில் வெளியான படங்களில் காமெடி செய்யும் இளைஞன் கேரக்டரில் இடம்பெற்றவர் காஜா ஷெரீப். நல்ல நடிகராக புகழ் பெற வேண்டியவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
சினிமா எப்போது ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும், எப்போது உச்சத்தில் இருக்கும் நடிகரை கீழே கொண்டு போகும் என்பது யாராலும் கணிக்க முடியாத ஒன்றாகும். சினிமாவில் திறமை குறைவாக இருந்தும் சில நடிகர்கள் அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளை பெற்று, முன்னிலைக்கு வரக்கூடும்.
அதே நேரம் நல்ல திறமைகள் இருந்தும் குறிப்பிட்ட சில காரணங்களால் வீழ்ச்சி அடைந்த நடிகர்கள் பலர் உள்ளனர். இதேபோன்று சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் அந்த துறையில் முழுவதுமாக பயணிக்க முடியாமல் அதிலிருந்து விலகிச் செல்லக்கூடிய நடிகர்களும் உள்ளனர். அந்த வரிசையில் தான் 1980களில் காமெடி செய்யும் இளைஞன் கேரக்டரில் நடித்து பெயர் பெற்ற காஜா ஷெரீப்பும் இணைந்துள்ளார்.
பாக்யராஜ் நடிப்பில் வெளியான அந்த ஏழு நாட்கள் படத்தில் பாலக்காட்டு மாதவன் என்ற கேரக்டரில் பாக்யராஜ் நடித்திருந்தார். அவருக்கு சிஷ்யனாக நடித்தவர் தான் இந்த காஜா ஷரீப். இதேபோன்று சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இயக்குனர் விசுவின் இரண்டாவது மகனாகவும், ரகுவரனின் தம்பியாகவும் இவர் நடித்திருந்தார். இதேபோன்று ரஜினி கமல் உள்ளிட்டோர் படங்களிலும் காஜா ஷெரிப் நடித்திருப்பார்.
ஒரு சமயம் காஜா ஷெரீப் கமல்ஹாசன் போன்று வருவார் என்று இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கூறியிருந்தாராம். இருப்பினும் காலம் செல்ல செல்ல அவரால் சினிமா துறையில் முழுவதுமாக பயணிக்க முடியவில்லை.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குறைந்ததால் காஜா ஷெரீப் தற்போது வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது போன்று வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் போது அங்கு சினிமா நட்சத்திரங்களை பங்கேற்க வைக்க செய்யும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகவும் காஜா ஷெரீப் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.