எம்.ஜி.ஆருக்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கமல்… எந்த படம் தெரியுமா?
நடிகர் மற்றும் மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கு தம்பியாக நடிக்க வந்த வாய்ப்பை கமல்ஹாசன் ஒருமுறை தவற விட்டுள்ளார். அது குறித்து இன்றைக்கும் அவர் வருத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் சினிமாவில் 5 வயது சிறுவனாக களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் தனது நடிப்பு பயணத்தை கமலஹாசன் துவங்கினார். அந்த படத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி ஜோடிக்கு கமல்ஹாசன் மகனாக நடித்திருப்பார். இதன் பின்னர் சிவாஜியுடன் பார்த்தால் பசி தீரும், எம்ஜிஆர் உடன் ஆனந்த ஜோதி என சில படங்களில் கமல் நடித்திருந்தார்.
5 வயதில் இருந்து 9 வயது வரை குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்த கமல்ஹாசனால், அதன் பின்னர் சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியவில்லை. நடன இயக்குனர் தங்கப்பன் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்து சில படங்களில் அவர் பணியாற்றினார். தன்னுடைய 22 வது படத்தில் வயதில் கமல்ஹாசன் உணர்ச்சிகள் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து அவருக்கு இயக்குனர் சிகரம் பாலச்சந்தரின் தொடர்பு கிடைத்தது. கமல் நடித்த சகலகலா வல்லவன், விக்ரம், தூங்காதே தம்பி தூங்காதே, நாயகன், நம்மவர், தேவர் மகன் உள்ளிட்ட படங்கள் கமலுக்கு மிகப்பெரும் வரவேற்பை பெற்றுக் கொடுத்தன.
இதற்கிடையே எம்ஜிஆர் நடித்த ‘நாளை நமதே’ என்ற படத்தில் அவருக்கு தம்பியாக நடிக்க கூடிய வாய்ப்பு கமலஹாசனுக்கு வந்தது. அப்போது அவர் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், இந்த வாய்ப்பை அவர் தவறவிட்டார்.
நாளை நமதே படத்தில் வரும் எம்ஜிஆருடைய குடும்ப பாடலான ‘நாளை நமதே நாளை நமதே’ என்ற பாடலில் எம்ஜிஆர் தனது தம்பிகளுடன் இணைந்து நடித்திருப்பார். அந்த இடத்தில் கமல் இருக்க வேண்டிய வாய்ப்பு வந்தும் அதனை தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் தவறவிட்டார். இது குறித்து இன்றைக்கும் அவர் வருத்தப்பட்டு கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
நாளை நமதே பாடலில் எம்ஜிஆர் உடன் இணைந்து நடித்திருந்தால் அது தனது அரசியல் வாழ்வுக்கு எவ்வளவு பாசிட்டிவாக அமைந்திருக்கும் என்று அவர் கூறி வருத்தப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது.