Daily Rasi Palan | இன்றைய ராசிபலன், 04 பிப்ரவரி 2024

மேஷம்:

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படவும், நல்லிணக்கம் உருவாகவும் உங்கள் வாழ்க்கை துணை பக்க பலமாக இருப்பார்கள். நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் இருந்தாலும் உரையாடல்கள் மூலமாக அதற்கு தீர்வு காணலாம். பொறாமையை கைவிட்டு சமரசங்களை செய்து கொண்டால் புரிந்துணர்வு அதிகரிக்கும். முதலீடுகளை செய்யும்போது எச்சரிக்கை அவசியம்.

அதிர்ஷ்ட எண் – 7

அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு

ரிஷபம்:

உங்கள் காதல் வாழ்க்கை இன்று நிலையானதாக இருக்கும். கணவன் மனைவியிடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். சொத்து தொடர்புடைய பிரச்சினைகள் ஏற்பட்டாலும் புரிந்துணர்வு மூலமாக அதற்கு தீர்வு காணலாம். அலுவலக பணி மற்றும் சொந்த வாழ்க்கை இடையே சீரான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முதலீடு செய்ய இது உகந்த நேரம் ஆகும். இருப்பினும் சற்று கவனத்துடன் அடியெடுத்து வைக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 5

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

மிதுனம்:

கணவன் – மனைவி இடையே ஆச்சரியம் அடையத் தகுந்த நிகழ்வுகள் அரங்கேறும். உரையாடல் நேர்மையானதாக இல்லை என்றால் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். நிதி தொடர்புடைய விஷயங்களில் முறையான திட்டமிடல் அவசியம். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு முன்பாக விரிவான ஆய்வு தேவை. ரகசியமாக இந்த தகவல்களை யாரிடமும் வெளிப்படுத்த வேண்டாம்.

அதிர்ஷ்ட எண் – 3

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள்

கடகம்:

வாழ்க்கை துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் மற்றும் உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பார்கள். சிந்தனை தடுமாற்றங்களால் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் முறையான உரையாடல் மூலமாக அதற்கு தீர்வு காணலாம். பொருளாதார சூழல் சமூகம் மனதாக இருக்கும். அதே சமயம் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட எண் – 2

அதிர்ஷ்ட நிறம் – சில்வர்

சிம்மம்:

உங்கள் காதல் உறவுகளில் இன்று ஆற்றலை உணர்வீர்கள். கவனத்தை ஈர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகின்ற சில நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமளிக்கும். பொறாமை என்னும் காரணமாக வாக்குவாதம் அதிகரிக்கலாம். ஆனால் சமரசம் மூலமாக அதற்கு தீர்வு காண முடியும். முதலீடுகளில் இழப்புகளை தவிர்க்க மார்க்கெட் சூழலை கவனமாக பரிசீலனை செய்யவும்.

அதிர்ஷ்ட எண் – 8

அதிர்ஷ்ட நிறம் – தங்கம்

கன்னி:

உங்கள் காதல் சூழல் எதார்த்தமானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை சிறப்பான கணிப்புகளை மேற்கொள்வார்கள். தேவையற்ற சிந்தனைகளை கொண்டிருந்தால் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும். எதிலும் நடுநிலைமை கண்டறிந்து செயல்பட்டால் புரிந்துணர்வு ஏற்படும். பொருளாதாரம் சார்ந்த திட்டமிடல்கள் மிக அவசியம். திருட்டை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

அதிர்ஷ்ட எண் – 4

அதிர்ஷ்ட நிறம் – ப்ளூ

துலாம்:

உங்கள் காதல் வாழ்வில் நல்லிணக்கம் நிலவும். உங்கள் வாழ்க்கை துணையுடன் புரிந்துணர்வு அதிகரிக்கும். உரையாடல்கள் நேர்மையானதாக இருந்தால் சந்தேகங்களுக்கு இடம் இருக்காது. திட்டமிடல் இல்லாமல் குத்து மதிப்பாக மேற்கொள்ளப்படும் முதலீடுகளை தவிர்க்கவும். உங்கள் மனநலன் மற்றும் உடல் நலன் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தவும்.

அதிர்ஷ்ட எண் – 6

அதிர்ஷ்ட நிறம் – பிங்க்

விருச்சிகம்:

உங்கள் காதல் வாழ்க்கையில் நெருக்கம் அதிகரிக்கும். ரகசியங்களை கடைபிடித்தால் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகள் உருவாகும். இருப்பினும் உரையாடல்கள் மூலமாக அதற்கு தீர்வு காணலாம். குழந்தைகளுக்கு உங்கள் ஆதரவு தேவைப்படுகிறது. நீங்கள் இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்பதால் உங்கள் தனிப்பட்ட பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். தினசரி பொறுப்புகளால் சோர்வு அடைவீர்கள்.

அதிர்ஷ்ட எண் – 9

அதிர்ஷ்ட நிறம் –மெரூன்

தனுசு:

உங்கள் காதல் வாழ்க்கை சாகசம் நிரம்பியதாக இருக்கும். பொறுப்புகளை ஒதுக்கி வைத்து வந்தால் உங்கள் மீதான நம்பிக்கை குறையலாம். உரையாடல்கள் வெளிப்படையாக இருந்தால் அச்சத்தை போக்கலாம். உங்கள் பணிகளுக்கிடையே வீட்டில் பலன் உள்ள வகையில் செலவிட நேரத்தை ஒதுக்கவும். உங்கள் உடல் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 3

அதிர்ஷ்ட நிறம் – டார்கோய்ஸ்

மகரம்:

உங்கள் வாழ்க்கை துணை உங்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருப்பார்கள். மிக அதிகப்படியான நேரம் உங்கள் வேலைகளை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தால் பிரச்சனைகள் வரக்கூடும். குடும்பத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்தவும். சமரசத்துடன் நடந்து கொண்டால் புரிந்துணர்வு அதிகரிக்கும். ஆனாலும் வாக்குவாதம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண் – 1

அதிர்ஷ்ட நிறம் – பிரவுன்

கும்பம்:

இன்றைக்கு அறிவார்த்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். எதிரிகளால் உங்களுக்கு பிரச்சனைகள் உண்டாகலாம். மற்றவர்களின் கருத்தை கவனமுடன் பரிசீலனை செய்தால் புரிந்துணர்வு ஏற்படும். குழந்தைகள் கல்வி சார்ந்த பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். உங்கள் பொருளாதாரம் பலமானதாக இருந்தாலும் முதலீடுகளை செய்யும் முன்பாக யோசிக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 11

அதிர்ஷ்ட நிறம் – ப்ளூ

மீனம்:

தம்பதியர்கள் இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பிரச்சினைகளுக்கு பொறுப்பேற்காமல் விலகி இருக்க நினைத்தால் உங்கள் மீதான நம்பிக்கை குறைய நேரிடும். சிந்தனை தடுமாற்றங்களால் தவறான புரிந்துணர்வு ஏற்படலாம். பொருளாதார விவகாரங்களில் தோராயமான முடிவுகளை கைவிடவும். உங்கள் பொருட்களை திருடு போகாமல் பாதுகாக்கவும்.

அதிர்ஷ்ட எண் – 77

அதிர்ஷ்ட நிறம் – பச்சை

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *