வந்தாச்சு புதிய டிவிஎஸ் அப்பாச்சி.. விலை முதல் சிறப்பம்சங்கள் வரையிலான முழு விபரம்!
கோவாவில் நடந்த இரண்டு நாள் வாகனத் திருவிழாவான மோட்டோசோல் 2023-இல் (Motosoul 2023) புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கை நிறுவனம் அறிமுகம் செய்தது. அதனுடன் விலையையும் வாடிக்கையாளர்களுக்காக அறிவித்தது. அதன்படி, அடுத்த ஆண்டு சந்தைக்கு கொண்டுவரப்படும் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.35 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் இப்போதே டிவிஎஸ் முகவர்களிடம் இந்த பைக்கை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதையே டிவிஎஸ் இருசக்கர வாகனங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகவும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் சிறப்பம்சங்கள் என்ன? பழைய அப்பாச்சி பைக்குகளை விடவும் சிறந்தாக இதை மாற்ற பல அப்கிரேட்களை நிறுவனம் செய்துள்ளது. டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் வரும் இந்த பைக், பின்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கைக் கொண்டுள்ளது. இது பழைய அப்பாச்சி பைக்கை விட பெரியதாகும். மேலும், இதில் ரைடர்களுக்காக பல ரைடிங் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து வகைகளிலும் உடன் வருவதாக ஸ்மார்ட் கனெக்ட் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக நமது ஸ்மார்ட்போன்களை பைக்குடன் கனெக்ட் செய்து கொள்ளலாம்.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் எஞ்சின் திறன்… 2024-ஆம் ஆண்டு முதல் இந்திய சாலைகளில் வலம் வர போகும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் 160சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படும். இது ஒரு ஏர் அல்லது ஆயில் கூல்டு எஞ்சின் என்பது சிறப்புக்குரியது. இது 8000 ஆர்பிஎம்மில் 6.2 பிஎச்பி பவரையும், 6500 ஆர்பிஎம்மில் 14.8 என் எம் டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. மேலும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் டெலஸ்கோபிக் ஃபோர்க் உடன் வரும் புதிய அப்பாச்சி பைக், பின்பக்கம் மோனோ-ஷாக் அப்சார்பருடன் வருவது குறிப்பிடத்தக்கது.