இது தெரியுமா ? தினசரி இந்த விஷயங்களை செய்து வர மென்மையான அழகான பாதங்களைப் பெறலாம்..!

எண்ணெய் மசாஜ்: விளக்கெண்ணெய் , ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணை மூன்றையும் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அதை பாதங்களில் தடவி மசாஜ் செய்ய வெடிப்புகள் சரியாகி மென்மையான பாதங்களைப் பெறலாம்.

வாழைப்பழம் பேக்: வாழைப்பழத்தை மசித்து தேன் கலந்து கால்களில் பேக் போல் அப்ளை செய்து 20 நிமிடங்கள் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ பாதங்களுக்கு ஈரப்பதம் கிடைக்கும்.

உப்பு ஸ்கிரப்: உப்பும் ஆலிவ் எண்ணெயும் கலந்து கால்களில் தேய்த்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்ய பியூமிஸ் கல் இருந்தால் பயன்படுத்தலாம். ஸ்கிரப் செய்யும்போது வெடிப்புகளுக்குள் கீரல் விழாமல் பார்த்துக்கொள்ளவும்.

பப்பாளி பழத்தை நன்கு மைபோல் அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற பொருட்களால் தேய்த்து கழுவினால், பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவது தவிர்க்கப்படுவதோடு, பாதமும் மென்மையாக இருக்கும்.

வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *