|

கன்னிப்பெண்கள் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மரம்.! மாதவிடாய் முதல் வெள்ளைப்படுதல் வரை ஒரே தீர்வு.!

இளம் பெண்கள் இருக்கும் வீட்டில் கல்யாண முருங்கை இருக்க வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஏனெனில் இந்தக் கல்யாண முருங்கை மரம் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒன்றாகும்.

இந்த இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் பெண்களின் ஹார்மோன்கள் வளர்ச்சி சீராக இருக்கும். மேலும் அவர்களின் கர்ப்பப்பை மற்றும் மாதவிடாய் ஆரோக்கியத்தில் இந்த இலைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த இலைகள் கால்சியம், இரும்புச்சத்து, ஃபைபர் மற்றும் துத்தநாக சத்துக்களை உள்ளடக்கியது.

இந்த இலைகளை தினமும் உணவில் எடுத்துக் கொண்டால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கக் கூடியது. மேலும் கருவில் இருக்கும் சிசுவின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது கருச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. இந்த இலைகள் ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினையை சரி செய்கிறது. மேலும் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது. கல்யாண முருங்கை இலையுடன் சிறிது வெந்தயம் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் சரியாகும்.

மேலும் தாய்ப்பால் சுரக்கவும் இந்த இலை உதவி புரிகிறது. இந்த இலைகளுடன் மிளகு சேர்த்து சாப்பிட்டு வர குளிர் காலங்களில் ஏற்படும் காய்ச்சல் இருமல் போன்றவை குணமாகும். கல்யாண முருங்கை இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து அரைத்து உடலில் பூசினால் தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் கல்யாண முருங்கை இலைகளுடன் முருங்கைக்கீரை மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து சூப் வைத்து சாப்பிட்டால் ரத்த சோகை நீங்கி இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். மேலும் இவை மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கையும் சரி செய்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *