இது தெரியுமா ? தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது…

1. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

2. பீட்டா கரோட்டீன்ஸ் அதிகமுள்ள உணவுகளை உண்பது இதயத்துக்கு நல்லது. குறிப்பாக கேரட், கோவா, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அடர் பச்சை நிற கீரைகள் போன்றவை

3. சூடான உணவை சப்பிட்ட நொடியே, குளிர்ச்சியான உணவுக்கு மாறினால், உடலுக்கும் பல்லுக்கும் பாதிப்புகள் ஏற்படும்.

4. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.

5. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.

6. கிட்னியில் கல் இருக்கிறதா? சாப்பாட்டில் மெக்னீசியம் சேருங்கள். நிறைய பீன்ஸ் சாப்பிட்டாலே போதும். கோதுமை, ஓட்ஸ், பாதாம், முந்திரி, மீன், பார்லி போன்றவையெல்லாம் மெக்னீசியம் அதிகம் உள்ள சில உணவுகள்.

7. மன அழுத்தம் இதயத்தின் முதல் எதிரி. அதை விட்டுத் தள்ளுங்கள்.

8. உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய்கள் இருந்தால், உங்கள் இதயத்தை மருத்துவர் மூலம் சோதிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

9. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.

10. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால், நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

11. இலந்தை மரத்தின் இலையை மைய அரைத்து காயத்தின் மீது போட்டு வர வெட்டுக்காயம் குணமாகும்.

12. எருக்கஞ் இலையின் பின்புறம் விளக்கெண்ணெய் தடவி தணலில் காட்டி கட்டிகள் மீது வைத்துக் கட்டினால் கட்டி பழுத்து உடையும்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *