நல்லவேளை தப்பிச்சோம்.. தமிழ் தலைவாஸ்-க்கு உதவிய உபி யுத்தாஸ்.. சரிந்த யு மும்பா
பத்தாவது சீசன் புரோ கபடி லீக் சுற்றில் யு மும்பா – யுபி யுத்தாஸ் அணிகள் மோதிய போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்கு சாதகமான முடிவு கிடைத்தது.
தமிழ் தலைவாஸ் அணி புள்ளிப் பட்டியலில் 17 போட்டிகளின் முடிவில் 40 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. யு மும்பா அணியும் 16 போட்டிகளின் முடிவில் 40 புள்ளிகளுடன் இருந்தாலும் போட்டியில் பெற்ற புள்ளிகள் வித்தியாசத்தில் பத்தாவது இடத்தில் இருந்தது. யு மும்பா தமிழ் தலைவாஸ் அணியை விட ஒரு போட்டி குறைவாக ஆடி இருந்த நிலையில், அந்த அணி தன் 17வது போட்டியில் வெற்றி பெற்று தமிழ் தலைவாஸ் அணியை பத்தாவது இடத்துக்கு தள்ள அந்த அணி முயற்சிக்கும் என ரசிகர்கள் கூறி வந்தனர்.
ஆனால், அதற்கு நேர்மாறாக 11வது இடத்தில் இருக்கும் யுபி யுத்தாஸ் அணி, யு மும்பா அணியை 39 – 23 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், யு மும்பா 17 போட்டிகளின் முடிவில் 10வது இடத்திலேயே தொடர்கிறது. இது ஒரு வகையில் தமிழ் தலைவாஸ் அணி பிளே-ஆஃப் செல்ல உதவக் கூடும்.
புரோ கபடி லீக் புள்ளிப் பட்டியல் (103வது லீக் போட்டியின் முடிவில்) –
ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் – 71 புள்ளிகள் – 1வது இடம்
புனேரி பல்தான் – 68 புள்ளிகள் – 2வது இடம்
டபாங் டெல்லி – 65 புள்ளிகள் – 3வது இடம்
ஹரியானா ஸ்டீலர்ஸ் – 55 புள்ளிகள் – 4வது இடம்
பாட்னா பைரேட்ஸ் – 53 புள்ளிகள் – 5வது இடம்
குஜராத் டைட்டன்ஸ் – 50 புள்ளிகள் – 6வது இடம்
பெங்கால் வாரியர்ஸ் – 44 புள்ளிகள் – 7வது இடம்
பெங்களுரு புல்ஸ் – 43 புள்ளிகள் – 8வது இடம்
தமிழ் தலைவாஸ் – 40 புள்ளிகள் – 9வது இடம்
யு மும்பா – 40 புள்ளிகள் – 10வது இடம்
யுபி யுத்தாஸ் – 28 புள்ளிகள் – 11வது இடம்
தெலுகு டைட்டன்ஸ் – 16 புள்ளிகள் – 12வது இடம்