சிஎஸ்கே தம்பினு நிரூபிச்சிட்டாங்க.. கடைசி போட்டியில் ப்ளே ஆஃப் சென்ற ஜேஎஸ்கே.. மும்பைக்கு ஆப்பு!

எஸ்ஏ20 லீக் தொடரின் ப்ளே ஆஃப் சுற்றுக்கு கடைசி நிமிடத்தில் சிஎஸ்கே தம்பியான ஜேஎஸ்கே அணி முன்னேறியுள்ளது.

எஸ்ஏ20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பார்ல் ராயல்ஸ் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன. இந்த நிலையில் கடைசி இடத்திற்கான போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை கேப் டவுன் இடையில் போட்டி இருந்தது. இந்த நிலையில் ஜேஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் வென்றால், ப்ளே ஆஃப் சுற்றுக்கு ஜேஎஸ்கே அணி முன்னேறும் வாய்ப்பு இருந்தது.

இந்த நிலையில் முதல் பேட்டிங் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஸ்மட்ஸ் – முல்டர் இருவரும் இணைந்து திடீரென அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 115 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், ஸ்மட்ஸ் 34 பந்துகளில் 55 ரன்களும், முல்டர் 40 பந்துகளில் 59 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் வந்த கிளாஸன் 16 பந்துகளில் 3 சிக்ஸ், 3 ஃபோர்ஸ் உட்பட 40 ரன்களை சேர்த்தார்.

இறுதியாக 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்களை குவித்தது. ஜேஎஸ்கே அணியின் வெற்றிக்கு 204 என்ற என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கேப்டன் டூ பிளஸிஸ் – பிளாய் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியில் வெளுத்து கட்டிய நிலையில், டூ பிளஸிஸ் அரைசதம் கடந்தார். சிறப்பாக ஆடிய அவர் 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த வெயின் மட்சன் பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதனால் 16 ஓவர்கள் முடிவில் ஜேஎஸ்கே அணியின் ஸ்கோர் ஒரு விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களாக இருந்தது.

இந்த நிலையில் 17வது ஓவரில் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டு பிளாய் 57 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தின் பரபரப்பு உச்சிக்கு சென்றது. தொடர்ந்து வந்த மொயின் அலி அதிரடியாக விளையாடி 18வது ஓவரில் 17 ரன்களை சேர்க்க, கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. நவீன் உல் ஹக் வீசிய 19வது ஓவரில் மொயின் அலி 2 சிக்ஸ் உட்பட 15 ரன்களை சேர்த்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்ட போது, முதல் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட, 2வது பந்தில் மொயின் அலி 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டம் ஜேஎஸ்கே அணியின் கைகளில் இருந்து சென்றதாக பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசியான வந்த டோனவன் ஃபெரேரா, தான் சந்தித்த முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க, அடுத்த பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் மீண்டும் 5வது பந்தில் சிக்சரை விளாசி ஜேஎஸ்கே அணியை வெற்றிபெற வைத்தார் டோனவன் ஃபெரேரா. இதன் மூலம் ஜேஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து 2வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று சிஎஸ்கே அணியின் மானம் காத்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *