உலகின் முதல் சூரிய ஒளியை கன்ட்ரோல் செய்யும் மேற்கூரைக்கான கிட் அறிமுகம்! காரை எப்போதும் அழகாக வச்சுக்கலாம்!
கர்வேர் ஹை-டெக் ஃபிலிம்ஸ் (Garware Hi-Tech Films) நிறுவனம், இந்தியாவில் அதன் புதிய தயாரிப்புகளான சன் – ரூஃப் மற்றும் மூன் – ரூஃப் ஃபிலிம் கிட் (Film Kit)-களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இத்துடன், ரூஃப் டாப் (மேற்கூரை)க்கான புதிய ஃபிலிமையும் அறிமுகம் செய்துள்ளது.
வாகனங்களின் பெயிண்டை பாதுகாக்கும் மற்றும் மெருகூட்டச் செய்யும் ஃபிலிம் (Film)-களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஓர் முன்னணி நிறுவனம் கர்வேர் ஹை-டெக் ஃபிலிம்ஸ் (Garware Hi-Tech Films). இந்த நிறுவனமே இந்தியாவில் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சன்-ரூஃப் (Sun-Roof) மற்றும் மூன்-ரூஃப் (Moon-Roof) ஃபிலிம் கிட் (Film Kit)-ஐ அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து ரூஃப் டாப் (மேற்கூரை)க்கான ஃபிலிமையும் அது அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்த தயாரிப்புகளைக் கொண்டு வாகனங்களை வேற லெவல் தரத்திற்கு உயர்த்திக் கொள்ள முடியும். இதையே கர்வேர் ஹை-டெக் ஃபிலிம்ஸ் நிறுவனம் அதன் தரப்பில் இருந்தும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக, வாகனங்கள் விஷயத்தில் விவேகத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஈடு இணையற்ற அனுபவத்தை கார்வேர் ஹை-டெக் ஃபிலிம்ஸின் இந்த புதிய தயாரிப்புகள் வழங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
வாகனங்களின் தரத்தையும், அதில் கிடைக்கும் அனுபவத்தையும் மேம்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிப்பதில் கர்வேர் ஹைடெக் ஃபிலிம்ஸ் நீண்ட காலமாக ஈடுபட்டு வருகின்றது. இதனாலேயே இப்போது அந்த நிறுவனம் இவ்விஷயத்தில் சிறந்து விளங்க முடிகின்றது. அர்பணிப்புடன் வாகனத்துறையில் அந்நிறுவனம் செயலாற்றி வருவதும் இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்த நிலையிலேயே புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வாகன ஆர்வலர்களை நிறுவனம் குஷிப்படுத்தி இருக்கின்றது. இதனை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) வாயிலாகவே கர்வேர் ஹை-டெக் ஃபிலிம்ஸ் அறிமுகம் செய்திருக்கின்றது.
மேலும், புதிய சன்-ரூஃப் மற்றும் மூன்-ரூஃப் ஃபிலிம்களை அறிமுகப்படுத்தியதன் வாயிலாக, மொபிலிட்டி விஷயத்தில் அதிநவீன தீர்வுகளை வழங்குவதற்காக அந்த நிறுவனம் எந்த அளவு அர்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை அடிக்கோடிட்டு காட்டியிருக்கின்றது. இதுதவிர, அடுத்து வரும் நாட்களில் இதுபோன்று இன்னும் பல தயாரிப்புகளை கர்வேர் ஹைடெக் ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்கள் அறிமுகம் செய்திருக்கும் இந்த ரூஃப்டாப் கிட்டே உலகின் முதல் சன் கன்ட்ரோல் கிட்டாகும். அதாவது, சூரிய ஒளியால் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்கும் வசதிக் கொண்ட முதல் மேற்கூரைக்கான கிட்டே இதுவாகும். கர்வேர் ஹைடெக் ஃபிலிம்ஸ் காரை அலங்கரிக்கும் மற்றும் அழகுப்படுத்தும் சாதனங்களை தயாரிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை மிகப் பெரிய அளவில் மற்ற நிறுவனங்களுக்கும் பரிமாற்றம் செய்து வருகின்றது.
நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் மிகவும் சாதாரணமான வாகனங்களைக் கூட மிக அதிக தரம் கொண்டதாகவும், பிரீமியம் லுக்கிற்கும் அப்கிரேட் செய்யும் திறன் கொண்டதாக இருக்கின்றன. மேலும், 90 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பணியில் கர்வேர் ஹை-டெக் ஃபிலிம்ஸ் அர்பணிப்புடன் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது.
இவர்களின் பெரும்பாலான தயாரிப்புகள் காரை மேலும் அழகுப்படுத்துவதாகவும் அல்லது இருக்கும் அழகை நீண்ட காலத்திற்கு தக்க வைக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கின்றன. இதன்படி நிறுவனம் வாகனங்களின் பெயிண்டை பாதுகாக்கும் ஃபிலிம்கள், வாகனங்களின் அழகை மெருகேற்றும் திறன் கொண்ட ஃபிலிம்கள், ஸ்கிராட் மற்றும் பொலிவிழப்பில் இருந்து பாதுகாக்கும் வசதிக் கொண்ட ஃபிலிம்கள் ஆகியவற்றையே அது முக்கிய தயாரிப்பாகக் கொண்டு தயாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.