தமிழ்நாட்டுக்கு தான் இதிலிலும் பிரதமர் முக்கியத்துவம்!! நம்ம ஊர் டிவிஎஸ் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் வேற ரகம்!
பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ 2024 (Bharat Mobility Global Expo 2024) கண்காட்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட அரங்கை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அங்கிருந்த டிவிஎஸ் வாகனங்களையும், தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளையும் பிரதமர் ஆர்வமாக பார்வையிட்டுள்ளார்.
இந்தியாவின் தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாகவும், அதேநேரம் அந்த கண்டுப்பிடிப்புகள் மூலமாக பசுமையான போக்குவரத்தை கொண்டுவரும் முயற்சியாகவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்சமயம், பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போ கண்காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, தனது உரையை கூடியிருந்த தொழிலதிபர்கள் முன் வழங்கினார். அதனை தொடர்ந்து, கண்காட்சியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்துக்காக வழங்கப்பட்டுள்ள அரங்கிற்கு பிரதமர் சென்றார்.
அங்கிருந்த டிவிஎஸ் மோட்டாரின் புதிய மாடர்ன் வாகனங்களையும், எலக்ட்ரிக் வாகனங்களையும் பார்வையிட்ட பிரதமர் மோடி, கண்காட்சியில் டிவிஎஸ் குறிப்பிட்டு இருந்த தனது சேவைகள் குறித்த விபரங்களையும் ஆர்வத்துடன் கேட்டறிந்தார். அதன்பின் பிரதமரின் சந்திப்பு குறித்து பேசிய டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்ஷன் வேணு, பிரதமரின் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைக்கும், இந்தியாவை பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக மாற்றியமைக்கும் நன்றி கூறினார்.
மேலும் பேசிய சுதர்ஷன் வேணு, வாகனங்களின் டிசைன், உருவாக்கம் மற்றும் எதிர்கால தொழிற்நுட்பங்களுக்காக ரூ.5,000 கோடியை டிவிஎஸ் முதலீடு செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தியா மட்டுமின்றி, சுமார் 80 நாடுகளில் வாகனங்களை விற்பனை செய்துவரும் நம் தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் வருடத்திற்கு சராசரியாக 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
டிவிஎஸ் மோட்டாரின் ஒட்டுமொத்த வருவாயில் இது 30% ஆகும். இதனை வரும் ஆண்டுகளில் 50% ஆக அதிகரிக்க டிவிஎஸ் விரும்புகிறது. இதன் மூலமாக, இந்தியாவின் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப ஆற்றலை உலகிற்கு வெளிக்காட்டுவதை நோக்கமாக கொண்டுள்ள மத்திய அரசின் அட்மனிர்பார் பாரத் திட்டத்தை செயல்படுத்தும் முக்கியமான தனியார் நிறுவனங்களுள் ஒன்றாக டிவிஎஸ் மோட்டார் விளங்குகிறது.
பாரத் மொபைலிட்டி க்ளோபல் எக்ஸ்போவில் மிக முக்கிய ஹைலைட் ஆக தனது லேட்டஸ்ட் எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை டிவிஎஸ் மோட்டார் காட்சிப்படுத்தி உள்ளது. இந்தியாவில் உருவாக்கப்படும் மிகவும் அட்வான்ஸான எலக்ட்ரிக் ஸ்கூட்டரான டிவிஎஸ் எக்ஸ், கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்ப வசதிகளை கொண்டுள்ளது. இதனுடன், தனது முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப்பையும் டிவிஎஸ் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது.
டிவிஎஸ் மோட்டாரின் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி அசெம்பிளி லைனில் பணியாற்றுபவர்களில் 65 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். அதேபோல், டிவிஎஸ் மோட்டாரின் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தில் 150க்கும் அதிகமான பெண் பொறியியலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்த சிறப்புகளையும் கண்காட்சியில் டிவிஎஸ் ஹைலைட் படுத்தி சுட்டிக்காட்டி உள்ளது. மேலும், இந்த கண்காட்சியில் டிவிஎஸ் அப்பாச்சி 310 பைக்குகளும், நார்டன் மோட்டார்சைக்கிள்களும் டிவிஎஸ் பெவிலியனில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.