இவ்ளோ கம்மியான விலையில் புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரா! போட்டி நிறுவனங்களை கதிகலங்க வைத்த எம்ஜி!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV). இதுதான் இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்த சூழலில் இந்த காரின் புதிய வேரியண்ட் (Variant) ஒன்றை எம்ஜி நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
அது எக்ஸீக்யூடிவ் (Executive) வேரியண்ட் ஆகும். இதுதான் இனி எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை (Entry Level) வேரியண்ட் ஆக இருக்கும். இதன் விலை வெறும் 18.98 லட்ச ரூபாய் மட்டுமே. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இதற்கு முன்பாக எக்ஸைட் வேரியண்ட்தான் (Excite Variant), எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட் ஆக இருந்து வந்தது. இந்த வேரியண்ட் உடன் ஒப்பிடும்போது, தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸீக்யூடிவ் வேரியண்ட்டின் விலை சுமார் 1 லட்ச ரூபாய் குறைவு ஆகும்.
எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் மற்ற வேரியண்ட்களில் பொருத்தப்பட்டுள்ள அதே பேட்டரிதான், எக்ஸீக்யூடிவ் வேரியண்ட்டிலும் பொருத்தப்பட்டுள்ளது. அது 50.3 kWh பேட்டரி (Battery) ஆகும். இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 461 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும். இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய ரேஞ்ச் (Range) ஆகும்.
50kW DC ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், இந்த பேட்டரியை, பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை நிரப்புவதற்கு வெறும் 60 நிமிடங்கள் மட்டுமே ஆகும். எம்ஜி நிறுவனம் தற்போது தனது நூற்றாண்டு கொண்டாட்டங்களை சிறப்பாக செய்து வருகிறது. இதை முன்னிட்டுதான் எம்ஜி இஸட்எஸ் இவி எலெக்ட்ரிக் காரின் விலை குறைவான புதிய வேரியண்ட் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.