Thug Life.. 36 ஆண்டுகள் கழித்து உருவாகும் மேஜிக் – இதற்கிடையில் மணிரத்னத்தின் படத்தை இரு முறை தவறவிட்ட கமல்!
உலக சினிமா அரங்கத்திலேயே அறிமுகம் தேவை இல்லாத ஒரு மாபெரும் நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். தனது ஐந்தாவது வயது முதல் நடித்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், கடந்த 1987 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் மணிரத்தினம் அவர்களுடைய இயக்கத்தில் நடித்து கலக்கிய திரைப்படம் தான் “நாயகன்”.
அந்த திரைப்படம் இந்திய திரையுலக வரலாற்றிலேயே ஒரு மைல் கல் என்றால் அது அல்ல. அதன் பிறகு உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் பல திரைப்படங்களில் நடித்து விட்டார், அதேபோல இயக்குனர் மணிரத்தினம் அவர்களும் பல நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து விட்டார். ஆனால் அந்த திரைப்படத்திற்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களும் மணிரத்தினம் அவர்களும் இணைந்து எந்த திரைப்படத்திலும் பணியாற்வில்லை.
இந்த நிலையில் சுமார் 36 ஆண்டுகள் கழித்து தற்பொழுது thug life என்கின்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். ஆனால் தற்பொழுது கிடைத்துள்ள சில தகவல்களின்படி மணிரத்னம் இயக்கத்தில் உருவான இரண்டு முக்கிய திரைப்படங்களில் நடிக்க முதலில் மணிரத்தினம், கமல்ஹாசன் அவர்களைத்தான் அணுகியதாக கூறப்படுகிறது.
கடந்த 1990 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கே. சுபாஷ் அவர்களுடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் சத்ரியன். இந்த திரைப்படத்தை தயாரித்து மற்றும் இந்த படத்திற்கான திரைக்கதையை அமைத்தது மணிரத்னம் அவர்கள் தான். கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய நடிப்பில் மெகா ஹிட் ஆன இந்த திரைப்படத்தில் முதலில் கமல்ஹாசன் அவர்களிடம் தான் கதை கூறப்பட்டதாக தற்பொழுது தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல மணிரத்னம் இயக்கத்தில் அதே 1990 ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற அஞ்சலி திரைப்படத்திலும் முதலில் நடிக்க ஒப்பந்தமானது கமலஹாசன் தான் என்றாலும், அந்த படத்தின் கதையின் காரணமாக அந்த படத்தில் நடிக்க உலகநாயகன் அவர்கள் மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.