அந்த விமான சேவையை தவிருங்கள்… மகளை இழந்த பெற்றோர் பொதுமக்களுக்கு உருக்கமாக வேண்டுகோள்
நடுவானில் அலாஸ்கா விமான சேவை நிறுவனத்தின் ஒரு விமானத்தின் கதவு திடீரென்று திறந்த சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், Boeing நிறுவனத்தின் விமானங்களை தவிருங்கள் என ஒரு பெற்றோர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்
அலாஸ்கா விமான சேவை நிறுவனத்தின் அந்த கதவு விவகாரம் Boeing நிறுவனத்தின் 737 Max விமானங்களின் சேவையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2019ல் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் 24 வயது மகளை இழந்த தம்பதி ஒன்று பொதுமக்கள் மற்றும் விமான பயணிகளுக்கு உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
அலாஸ்கா விமான சேவை நிறுவன விமானத்தில் ஏற்பட்ட சம்பவம் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ள அந்த பெற்றோர், கண்டிப்பாக அந்த பயணிகள் உயிருக்கு பயந்திருப்பார்கள் என்றும், காயமடைந்திருப்பார்கள் என்றும், ஆனால் உயிர் தப்பியுள்ளது அதிர்ஷ்டம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2019ல் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான Boeing 737 Max விமானமானது புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தில் சிக்கியது. இதில் 24 வயதான Samya Stumo உட்பட 157 பேர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த விபத்தானது இந்தோனேசியாவில் 189 பேர்கள் கொல்லப்பட்ட Lion Air விபத்து நடந்து 5 மாதங்களில் ஏற்பட்டுள்ளது. லயன் ஏர் விமான சேவையும் Boeing 737 Max விமானம் தான்.
பயணங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்
தற்போது Samya Stumo-வின் பெற்றோர் தெரிவிக்கையில், இதுபோன்ற விபத்துகளில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை காரணமாகவே Boeing 737 Max விமானங்களை தவிருங்கள் என கூறி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்த வகை விமானங்கள் மொத்தமாக சேவையை நிறுத்த வேண்டும். நமது விமான பயணங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவர்கள் நமது விமான பயணங்களை பாதுகாப்பாக மாற்ற முன்வரவில்லை என்றால், நாம் ஏன் அப்படியான விமானங்களில் பயணிக்க வேண்டும் என்றும் அந்த பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஜனவரி 5ம் திகதி அலாஸ்கா விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று 16,000 அடி உயரத்தில் பறந்த நிலையில் அதன் கதவு பிய்த்துக்கொண்டு வெளியேறியது. ஆனால் விமானியின் சமயோசித முடிவால், புறப்பட்ட இடத்திற்கே விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இதனையடுத்து அரசாங்க அதிகாரிகள் தரப்பு இந்த விவகாரத்தில் விசாரணை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் அலாஸ்கா விமான சேவை நிறுவனம் மற்றும் United Airlines நிறுவனம் ஆகியவை தங்களின் Boeing 737 Max 9 விமானங்கள் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்தது.
இதனிடையே, இந்த சம்பவத்திற்குப் பிறகு, பங்குதாரர்களும் போயிங் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர், Boeing நிறுவனம் பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளித்ததாகக் குற்றஞ்சாட்டினர்.