பிரித்தானியாவில் சட்டவிரோத Streaming செய்த தலைமை ஆசிரியர்! 240,000 பவுண்டுகள் லாபம் பார்த்தவருக்கு சிறை
பிரித்தானியாவில் சட்டவிரோத ஒன்லைன் ஸ்ட்ரீமிங் வணிகத்தை நடத்தியதாக, தனியார் பாடசாலை தலைமை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தலைமை ஆசிரியர்
இங்கிலாந்தின் West Midlands-யில் உள்ள Stourbridge நகரில் செயல்பட்டு வரும் பாடசாலையில் தலைமை ஆசிரியராக இருப்பவர் Paul Merrell (43).
இவர் சட்டவிரோதமாக ஒன்லைன் ஸ்ட்ரீமிங் வணிகத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 4 ஆண்டுகளில் Paul, Subscription-only சேவைகளை சட்டவிரோதமாக வழங்கும் மென்பொருளை ஒரு மாதத்திற்கு 10 பவுண்டு என விற்று, அதன் மூலம் 240,000 பவுண்டுகள் லாபம் பார்த்துள்ளார்.
450,000 பவுண்டுகள்
மொத்தமாக அவர் PayPal கணக்கில் 450,000 பவுண்டுகள் பெற்றுள்ளார். ஆனால், அதில் கிட்டத்தட்ட 200,00 பவுண்டுகளை சட்டவிரோத ஸ்ட்ரீம்களை நடத்திய குற்றவியல் ஒன்லைன் நிறுவனங்களுக்கு மாற்றினார்.
பொதுவாக மாதத்திற்கு 50 முதல் 60 பவுண்டுகள் வரை வசூலிக்கப்படும் சந்தாவை Paul 10 பவுண்டுக்கு விற்றுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அவர் காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிப்புரிமை, வடிவமைப்புகள் ஆகிய இரண்டு குற்றங்களை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரிடம் 91,250 பவுண்டுகள் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. இதனால் Paul தனது வீட்டை இழக்க நேரிடும் என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.