இங்கிலாந்தில் பார்வையாளர்கள் முன்னிலையிலேயே குதிரையிலிருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த 25 வயது ஜாக்கி!
இங்கிலாந்தில் நடந்த குதிரை ஓட்டப் பந்தயத்தில் ஜாக்கி ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கென்ட் நகரின் Charing ரேஸ்கோர்ஸில் இறுதி குதிரை ஓட்டப் பந்தயம் நடந்தது. இதில் கேகன் கிர்க்பி (Keagan Kirkby) எனும் 25 வயது ஜாக்கியும் கலந்துகொண்டார்.
பந்தயம் நடந்துகொண்டிருந்தபோது திடீரென அவர் குதிரையில் இருந்து தூக்கிவீசப்பட்டார். இதனைக் கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக மருத்துவக் குழு வந்து கேகனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பால் நிக்கோல்ஸ் குழுவில் கேகன் ஒரு மரியாதைக்குரிய உறுப்பினராக இருந்திருக்கிறார்.
அவர் 2019யில் பந்தயத்தில் இணைந்தார் மற்றும் டிசம்பர் 2021யில் மாதத்திற்கான பணியாளருக்கான விருது பெற்றார்.
கேகனின் பயிற்சியாளர் பால் நிக்கோல்ஸ் தனது இரங்கல் பதிவில், ‘வாழ்க்கை சில நேரங்களில் மிகவும் கடினமானது, இன்று நடந்ததை ஒப்பிடும்போது வெற்றியாளர்கள் முக்கியமற்றவர்கள்’ என தெரிவித்துள்ளார்.