குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் குஷ்பு ‘திடீர்’ சந்திப்பு..!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் குஷ்பு. பாரதிய ஜனதா கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராகவும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறார். பெண்கள் பிரச்சினை மற்றும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்காக அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் குஷ்பு கடந்த 2-ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்முவை திடீரென சந்தித்தார். சந்திப்பின் போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பெண்கள் பிரச்சினைகள் பற்றியும் ஜனாதிபதி முர்முவுடன் குஷ்பு விவாதித்துள்ளார். ஜனாதிபதி முர்முவை சந்தித்த புகைப்படங்களை குஷ்பு தனது வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.