இல்லத்தரசிகள் அதிர்ச்சி..! பூண்டு கிலோ ரூ.500-க்கு விற்பனை..!
வெங்காயத்தைப் போலவே சமையலுக்கு பூண்டின் தேவையும் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பூண்டின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரலாறு காணாத வகையில் பூண்டின் விலை கிலோ ரூ.500க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் விலையும் இந்த பூண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பூண்டின் வரத்து கணிசமாக குறைந்திருக்கும் நிலையில் பூண்டின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பூண்டின் விலை கிலோ ரூ.250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 500 முதல் 800 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூண்டின் விலை அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில் ஹோட்டல்களில் துரித உணவுகளின் விலையும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.