பொதுமக்களே கவனம்!! தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க போகுதாம்..!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து தற்போது கூடுதல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த கூடுதல் வெப்பத்தினால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பொழியும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது.
இந்நிலையில், பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரையிலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்திருக்கிறது. சென்னையை பொருத்தவரையிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக, மூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரில் ஒரு சில பகுதிகளில் கூடுதல் வெப்பத்தால் லேசான மழை பொழிவு இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் வழங்கப்படாத நிலையில் கடலுக்குள் மீனவர்கள் வழக்கம் போல மீன் பிடிக்க செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.