வருமான வரி படிவங்களில் புதிய மாற்றங்கள்.. பணக்காரர்களே உஷார்..!!
மத்திய நேரடி வரிகள் வாரியம் 2024-24 கணக்கீடு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் படிவங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி ITR-2ஐ தாக்கல் செய்யப்போகும் நபர்கள் கூடுதல் தகவல்களை இனி வழங்க வேண்டி இருக்கும்.
அதாவது 50 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள், ஒன்றுக்கு மேல் சொந்த வீடு வைத்திருப்பவர்கள் வருமான வரி தாக்கலின் போது தனித்தனியாக விவரங்களை அளிக்க வேண்டும். மேலும் இப்போது கூடுதலாக சில முக்கிய விபரங்களை மத்திய நேரடி வரி வாரியம் கேட்டு உள்ளது.
இதில் முக்கியமான LEI, அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ள நன்கொடை, உடல் ஊனமுற்றோர்களுக்கு செய்யப்பட்ட மருத்துவ செலவுகள் ஆகியவற்றில் கூடுதல் விபரத்தை கேட்க துவங்கியுள்ளது.
வருமான வரித் தாக்கலுக்கான கடைசி தேதி: மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ITR-2 மற்றும் ITR-3 ஐ வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வரி செலுத்துபவர் தொழில் மூலம் வருவாய் பெறுபவர் எனில் வருமான வரி தணிக்கை செய்து ITR-3ஐ அக்டோபர் 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்
யாரெல்லாம் ITR-2ஐ தாக்கல் செய்ய வேண்டும்: ITR -1ஐ தாக்கல் செய்ய தகுதி இல்லாத தனிநபர்கள். வணிகம் அல்லது தொழில் மூலம் வருமான பெறாத தனிநபர்கள். வட்டி, ஊதியம், போனஸ், கமிஷன் போன்றவை பெறாதவர்கள். மனைவி வருமானத்தை தன்னுடைய வருமானத்துடன் இணைத்து கொண்டவர்கள்.
ITR-2இல் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:
LEI எனப்படும் Legal Entity Identifier எண் வழங்க வேண்டியது கட்டாயம். அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடைகளின் விவரம் (தேதி,பணம் செலுத்திய முறை ,பரிமாற்ற அல்லது காசோலை எண்)
தணிக்கை அறிக்கையின் முடித்திருக்க வேண்டும். இதை EVC மூலம் வெரிபை செய்திருக்க வேண்டும்.
வருமான வரித் தாக்கலில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்த கூடுதல் தகவல்கள் கேட்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒரு LEI (சட்ட நிறுவன அடையாளங்காட்டி) என்பது 20 குறியீடுகளைக் கொண்ட ஒரு தனித்துவமான குறியீடாகும், இது உலகளாவிய நிதி அமைப்புக்குள் ஒரு அமைப்பை அடையாளம் காண முடியும். 50 கோடிக்கும் அதிகமான பணத்தைத் திரும்பப்பெறுவதற்கு இது தேவைப்படுகிறது.
ITR-2 தாக்கல் செய்ய தேவைப்படும் ஆவணங்கள்:
Form 16A அதாவது, சேமிப்பு கணக்கு அல்லது நிலையான வைப்புத்தொகையில் கிடைத்த வட்டி தொகைகளுக்கான TDS சான்று
ஊதியம் மற்றும் பிற வருமானங்கள் தொடர்பான TDS பற்றி அறிய Form 26AS
வாடகை செலுத்தியதற்கான ரசீது
பங்குகள் அல்லது நிதி பத்திரங்களில் கிடைக்கும் வருமானங்களை கணக்கிட ஆண்டு லாபம்/இழப்பு அறிக்கை
பிரிவுகள் 80C, 80D, 80G, 80GG ஆகியவற்றின் கீழ் வரி விலக்கு கோரினால் காப்பீடு ப்ரீமியம் செலுத்திய ரசீது, நன்கொடை ரசீது , குழந்தைகள் கல்வி கட்டண ரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும்.