சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை எடுப்பது இவ்வளவு ஈஸியா? எப்படி தெரியுமா?
இனி சென்னை மெட்ரோ ரயில் பயணிப்பதற்கான டிக்கெட்டை ஓஎன்டிசி சேவை வழங்கும் தளத்திலும் எடுக்கலாம் என தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பல்வேறு வகையான டிக்கெட் ஆப்ஷன்கள் இருக்கும் நிலையில், தற்போது புதிய ஆப்ஷனாக இதுவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கியது முதல் ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் அந்த மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் வேலைக்கு செல்பவர்கள் முதல் சென்னைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் வரை பலர் இந்த மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க பல்வேறு வகையான டிக்கெட் ஆப்ஷன்கள் உள்ளன.
நேரடியாக கவுண்டரில் சென்று டிக்கெட் எடுப்பது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலமும் வாட்ஸ் அப் மூலமும் கூட டிக்கெட் எடுக்க முடியும். தற்போது இந்த ஆப்ஷன் உடன் கூடுதலாக ஓஎன்டிசி சேவை வழங்கும் ஆப்கள் மூலமும் டிக்கெட் எடுக்கலாம். ஓபன் நெட்வொர்க் டிஜிட்டல் காமர்ஸ் என்ற தளம் தான் ஒஎன்டிசி என்று அழைக்கப்படுகிறது. இதை தொழில்துறை மற்றும் உள் வர்த்தகத் துறை சார்பில் மத்திய அரசு உருவாக்கிய தளமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது இந்த ஓஎன்டிசி சேவைகளை நடத்திடும் ரேபிடோ, நம்ம யாத்திரி, ரெட்பஸ், ஆகிய தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த ஆப்களில் இனி சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் புக் செய்யலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நேரடியாக அந்த சென்னை மெட்ரோ ரயில் நிலையம் ஓஎன்டிசியுடன் கைகோர்த்துள்ள நிலையில் இனி ஓஎன்டிசி சேவைகளை பயன்படுத்தும் தளங்களில் சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட் எடுக்கும் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஓஎன்டிசி சேவையில் சென்னை மெட்ரோ மற்றும் இணைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் கொச்சி மெட்ரோ, கான்பூர் மெட்ரோ, புனே மெட்ரோ உள்ளிட்ட மற்ற மெட்ரோ சேவைகளும் விரைவில் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை மெட்ரோவில் ஒரு வழிப்பயணம் மற்றும் ரிட்டர்ன் பயணம் ஆகிய இரண்டு வகையான டிக்கெட்களையும் இதில் எடுத்துக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஎன்டிசி என்பது மத்திய அரசு அமைத்த மிக அதிக திறன் வாய்ந்த தொழில்நுட்ப அம்சமாகும். ஒரு தொழிலுக்கு மற்றொரு தொழில் உதவும் என்று ரீதியில் இருதொழில் பயனர்களும் பயனடையும் வகையில் இந்த இரு தொழிலையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த தொழில்நுட்பம். ஏற்கனவே ரைடுகளுக்கான டிக்கெட்களை புக் செய்து வரும் ரேபிடோ, ரெட்பஸ், நம்மயாத்திரி ஆகிய ஆப்களுடன் சென்னை மெட்ரோவை இணைப்பதன் மூலம் இரு நிறுவனங்களுக்கும் லாபம் கிடைக்கிறது.
இப்படியாக டிக்கெட்டை புக் செய்யும் பயனர்களுக்கு டிக்கெட் விலையில் எந்த விதமான மாற்றமும் இருக்காது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒவ்வொரு டிக்கெட் இருக்கும் மிகக்குறைவான கமிஷனை வழங்கும். இது மட்டுமே அந்த ஆப் நிறுவனத்திற்கு லாபமாக இருக்கும். ஏற்கனவே அந்த ஆப் மற்ற சேவைகளை வழங்கி வரும் நிலையில் இது ஒரு கூடுதல் சேவை என்பதால் எந்தவித செலவினங்களும் இல்லாமல் கூடுதல் வருமானம் ஈட்ட ஒரு வழியாக இருக்கும்.
தற்போது சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டை ஓஎன்டிசி தளத்துடன் இணைக்கும் பணி தற்போது தான் நடந்து வருவதால் இதுவரை குறிப்பிட்ட ஆப்களில் மெட்ரோ ரயில் டிக்கெட் விலை எடுக்கும் ஆப்ஷன் வழங்கப்படவில்லை. விரைவில் இதற்கான ஆப்ஷன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் எல்லாம் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தங்கள் பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அவர்களை டிக்கெட் எடுக்க அதிக நேரம் ஆக்காமல் தொடர்ந்து பல்வேறு வகையான டிக்கெட்டிங் ஆப்ஷன்களை வழங்கி வருகிறது. அதில் ஒரு டிக்கெட் தான் ஓஎன்டிசி சேவைகள் மூலம் டிக்கெட்களை வழங்குவது நிச்சயம் மக்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.