வெச்சு செஞ்சிட்டாங்க.. வெறும் ரூ.23,100 போதும்.. 200MP கேமரா.. 120W சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் 200எம்பி கேமரா, 16ஜிபி ரேம், ஓஎல்இடி டிஸ்பிளே, 120W சார்ஜிங், 5000mAh பேட்டரி கொண்ட ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போன் வெறும் ரூ.25,000 பட்ஜெட்டில் வெளியாகயிருக்கிறது.
இந்த போனின் லைவ்-பேஜ் பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (Redmi Note 13 Pro Plus Specifications): இந்த ரெட்மி போனில் சாம்சங் எச்பி3 (Samsung HP3) சென்சாருடன் 200 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivsion OV02B10) சென்சாருடன் 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.
அதேபோல ஓம்னிவிஷன் ஓவி16ஏ1கியூ (Omnivision OV16A1Q) சென்சாருடன் 16 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. கேமராவை போலவே சிப்செட் அம்சங்களும் மிரள வைக்கிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7200 அல்ட்ரா 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7200 Ultra 4nm) சிப்செட் வருகிறது.
கேமிங் பிரியர்கள் விரும்பும் மாலி-ஜி610 ஜிபியு (Mali-G610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் போனில் 6.67 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் சப்போர்ட் கிடைக்கிறது. அதோடு 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட் வருகிறது.
மேலும், 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் (Corning Gorilla Glass Victus) பாதுகாப்பு கொண்டிருக்கிறது.இந்த ரெட்மி மாடலில் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வருகிறது.
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மர்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 3 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் மாடலில் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி-சி சப்போர்ட் வருகிறது.
அதேபோல டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் வருகிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் கொண்டுள்ளது. இந்த ரெட்மியில் பிளாக் (Black) மற்றும் வைட் (White) கலர் விற்பனைக்கு வர இருக்கிறது.
அதேபோல லெதர் பினிஷிங்கில் மல்டி கலர் கொண்ட ப்யூஷன் டிசைன் (Fusion Design) மாடலும் கிடைக்க இருக்கிறது. இந்த போன் சீனாவில் வெளியாகிவிட்டது. வரும் ஜனவரி 4ஆம் தேதி இந்தியா மார்கெட்டில் களமிறங்குகிறது. இதனால், அந்த போனின் அதிகாரப்பூர்வ தகவல்கள் உறுதி செய்யப்பட்டுவருகின்றன. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதோடு லைவ் பேஜ் திறக்கப்பட்டுள்ளது. இந்த போனுக்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு கிளம்ப அதன் கம்மியான விலை நிர்ணயம் மட்டுமே காரணமாகும். ஏனென்றால், சீனாவில் இந்த போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,100ஆகவும், 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,015ஆகவும் இருக்கிறது.
அதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,150ஆகவும் இருக்கிறது. இதே விலை பட்டியலுடன் இந்தியா மார்கெட்டிலும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஆகவே, ரூ.25,000 பட்ஜெட்டுக்குல் 200 எம்பி கேமரா, 16 ஜிபி ரேம், 120W ஃபாஸ்ட் சார்ஜிங், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்ட போனை வாங்கலாம்.