ஃபிக்சட் டெபாசிட் முதலீடு அதிகம் தேர்வு செய்யப்படுவது ஏன்? கிடைக்கும் நன்மைகள் என்ன?
தங்களது பணத்தை எந்தவித அபாயத்திற்கும் உள்ளாக்காமல் உறுதியளிக்கப்பட்ட ரிட்டன்களை பெற நினைக்கும் நபர்களுக்கு ஃபிக்சட் டெபாசிட் ஒரு அற்புதமான முதலீட்டு ஆப்ஷனாக அமைகிறது. அதுமட்டுமல்லாமல் நீங்கள் வங்கியில் ஏதேனும் லோன் வாங்குகிறீர்கள் என்றால் உங்களது ஃபிக்சட் டெபாசிட்டை அடமானமாக காட்டிக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய முடிவு செய்துவிட்டால் தற்போது கிடைக்கக்கூடிய பல்வேறு விதமான ஃபிக்சட் டெபாசிட்களில் நீங்கள் எதில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
சிறிய அளவிலான தொகைகளை அனுமதிக்கிறது : ஃபிக்சட் டெபாசிட்டில் நீங்கள் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். இதில் அதிகபட்ச லிமிட் கிடையாது. உங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டின் அடிப்படையில் பணத்தை ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்து கொள்ளலாம்.
விருப்பமான கால அளவு :
உங்களது பணத்தை நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யக்கூடிய அனுமதியும் உங்களுக்கு வழங்கப்படுகிறது. ஃபிக்சட் டெபாசிட்டில் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். கூடுதலாக தேவைப்பட்டால் ஃபிக்சட் டெபாசிட்டுகளை ரின்யூ செய்து உங்களது பொருளாதார இலக்குகளை அடையலாம்.
FD மீதான கடன் :
ஃபிக்சட் டெபாசிட்டை முன்கூட்டியே வித்ட்ரா செய்வதற்கான தேவையை தவிர்க்கும் வகையில் இதனை அடமானமாக காட்டி நீங்கள் வங்கியில் கடன்களை வாங்கிக் கொள்ளும் மிகப்பெரிய பலன் இதில் உள்ளது. உங்களது மொத்த ஃபிக்சட் டெபாசிட் தொகையில் 90 முதல் 95 சதவீத தொகையை வங்கிகள் லோனாக வழங்குகின்றன. ஆனால் ஃபிக்சட் டெபாசிட்டை காட்டிலும் சற்று அதிகப்படியான வட்டி இதற்கு வசூலிக்கப்படுகிறது. ஒருவேளை நீங்கள் கடன் தொகையை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அந்தத் தொகை ஃபிக்சட் டெபாசிட் தொகையில் சரி செய்யப்படுகிறது.
சந்தை ஏற்ற இறக்கங்கள் :
சந்தையில் ஏற்படக்கூடிய ஏற்ற இறக்கங்களில் இருந்து ஃபிக்சட் டெபாசிட் முதலீட்டாளர்களை பாதுகாக்கிறது. ஃபிக்சட் டெபாசிட்டுக்கு நிலையான வட்டி கொடுக்கப்படுவதால் சந்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை.
வரிச்சலுகைகள் (ஐந்து வருட FD) :
ஐந்து வருடங்கள் அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்களுக்கு நீங்கள் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் பொழுது வருமான வரி சட்டத்தில் உள்ள பிரிவு 80 C இன் கீழ் வரி சலுகைகளை கிளைம் செய்து கொள்ளலாம்.
உறுதியளிக்கப்பட்ட ரிட்டன் :
ஒரு குறிப்பிட்ட கால அளவில் உங்களது பணம் எந்த அளவிற்கு வளர்ச்சி அடையும் என்பதை முதலீடாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
குறைந்த முதலீடு :
ஃபிக்சட் டெபாசிட்டில் ஒருவர் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம்.
சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக ரிட்டன் :
வழக்கமாக கமர்ஷியல் வங்கிகள் சீனியர் சிட்டிசன்களுக்கு 50 bps அதிக ரிட்டன்களை வழங்குகின்றன.
சேமிப்பு கணக்குகளை காட்டிலும் அதிக ரிட்டன் :
வழக்கமான சேமிப்பு கணக்குகளை ஒப்பிடுகையில் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு அதிக அளவிலான வட்டி கொடுக்கப்படுகிறது.