மகளை கிளாமர் குயினாக்கிய வனிதா… குட்டி நமிதா போல் மாறி ஜோவிகா நடத்திய செம்ம ஹாட் போட்டோஷூட் இதோ
நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் பிரபலம் ஆனார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சினிமாவில் பிசியாக நடித்து வரும் வனிதாவுக்கு ஜோவிகா, ஜெயனிகா என இரு மகள்கள் உள்ளனர். இதில் வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா தன் அம்மா ரூட்டையே பாலோ செய்து பேமஸ் ஆகி வருகிறார்.
வனிதா போல் ஜோவிகாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் களமிறங்கிய ஜோவிகா, ஆரம்பத்தில் பட்டாசாய் வெடித்தாலும், போகப் போக புஷ்வானம் ஆனதால் பாதியிலேயே எலிமினேட் ஆகி வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார் ஜோவிகா.
பார்த்திபன் இயக்கும் டீன்ஸ் திரைப்படத்தில் பணியாற்றி வரும் அவர், அடுத்ததாக சினிமாவில் ஹீரோயினாக எண்ட்ரி கொடுக்க இருக்கிறார். மகளுக்கு ஏற்கனவே பட வாய்ப்புகள் வந்துள்ளதாகவும் அதில் இரண்டு கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் வனிதா கூறி இருந்தார். இந்த நிலையில், தற்போது மகளை கிளாமர் குயினாக மாற்றி நடிகை வனிதா விஜயகுமார் போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.
விதவிதமான கவர்ச்சி ஆடைகளை அணிந்தபடி ஜோவிகா நடத்தி இருக்கும் இந்த செம்ம ஹாட் போட்டோஷூட்டை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். இந்த போட்டோஷூட்டில் ஜோவிகாவை பார்ப்பதற்கு குட்டி நமிதா போல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த போட்டோஷூட்டை பார்க்கும் போது சினிமாவில் கிளாமர் வேடங்களிலும் புகுந்து விளையாட ஜோவிகா தயாராகி வருவது போல் தெரிகிறது. ஜோவிகா எதிர்காலத்தில் நயன்தாரா, திரிஷா போல் சினிமாவில் ஜொலிப்பார் என்று வனிதா பேட்டியில் கூறி இருந்த நிலையில், தற்போது அதற்கான வேலைகளிலும் தீவிரமாக இறங்கி இருக்கிறார்.