ஏலே இது வீடா? இல்ல பஞ்சாயத்து குடோனா? பாக்கியலட்சுமியில் அடுத்தடுத்த அதிரடி..!
இன்றைய எபிசோட்டில் பாக்கியா பூஜை அறையில் கண்ணீர் சிந்தி எவளோ கஷ்டம் தான் கொடுப்ப என வேண்டிக்கொண்டு இருக்கிறார்.
பின்னர் காபி போட்டு செழியன் எடுத்துக்கிட்டு போக அங்கு கோபி அருகில் படுத்து தூங்கிக்கொண்டு இருக்கிறார்.
அவரை எழுப்ப போக இப்போ தான் தூங்குனான். எழுப்பாத என்கிறார் கோபி. இதையடுத்து காபியை கோபி கையில் கொடுத்துவிட்டு கீழே வருகிறார். ராதிகா டீயுடன் வர தான் கொடுத்து விட்ட தகவலை சொல்கிறார். உடனே ராதிகா பரவாயில்லை. நான் கோபப்பட என்ன இருக்கு? இத நீங்க குடிங்க எனக் கொடுத்து விட்டு செல்கிறார்.
இதை தொடர்ந்து கணேஷ் அமிர்தாவை அழைக்க செல்வதாக அம்மா, அப்பாவிடம் சொல்கிறார். அவங்க கொஞ்சம் பொறுமையா இரு. பேசிக்கலாம் என்கின்றனர். ஆனால் முடியாது எனக் கிளம்பிட அவர்கள் இந்த விஷயத்தினை பாக்கியாவிடம் சொல்கின்றனர். அவரை தடுத்து நிறுத்துங்க எனக் கேட்க அவன் கிளம்பிட்டான் எனக் கூற அதிர்ச்சி ஆகிவிடுகிறார்.
பாக்கியா பழனிசாமியிடம் கால் செய்து கேட்க, அவர் உடனே குடும்பத்திடம் இந்த விஷயத்தினை கூற சொல்கிறார். அதை செய்ய வேண்டும் என்பதால் அமிர்தாவை கோயில் போயிட்டு வர கூறுகிறார் பாக்கியா. எழிலை அழைத்து அமிர்தாவை கோயில் அழைத்து போ என அனுப்பி விடுகிறார். எழிலும் யோசித்துக்கொண்டே அமிர்தாவை கூட்டிக்கொண்டு கோயிலுக்கு செல்கிறார். இதனுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.