தினமும் காலையில் வால்நட் சாப்பிடலாமா..? இந்த பிரச்சனை இருக்கவங்க தவிர்த்திடுங்க..!
தினமும் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் விஷயங்களை செய்யும் போது, அந்த நாளே பயனுள்ளதாக இருக்கும். ஊட்டச்சத்து பவர்ஹவுஸ் என கூறப்படும் வால்நட்டை தினமும் காலையில் சாப்பிட்டால், நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. இந்த சிறிய வால்நட் கொட்டைகள் தான் நம் இதய ஆரோக்கியத்திற்கும் அறிவாற்றல் செயல்பாடுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
வால்நட் பருப்பில் ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஆண்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின், தாதுக்கள் ஆகியவை அதிகமுள்ளது. இதை தினமும் நம் டயட்டில் சேர்த்துக் கொண்டால் பல நன்மைகளை பெறலாம். அவை என்னவென்று ஒவ்வான்றாக இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
இதய நலன்:
வால்நட் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. அதோடு உடலில் உள்ள வீக்கமும் குறைகிறது. மேலும் வால்நட்டில் உள்ள ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மூளை வளர்ச்சி:
வால்நட்டில் உள்ள ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் நமது அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு உதவி செய்கிறது. தினமும் வால்நட் சாப்பிட்டு வந்தால் மூளையின் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கம் ஏற்படும் என சில ஆய்வுகள் கூறுகின்றன.
சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது:
வால்நட்டில் கலோரிகளின் அடர்த்தி அதிகம் இருந்தாலும், இதை சாப்பிட்டதும் வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கிறது. இதை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசி எடுப்பதில்லை. இதன் காரணமாக நமது உடல் எடையும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
ஆண்டி ஆக்ஸிடெண்ட்:
பாலிபீனால் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் வால்நட்டில் அதிகமுள்ளது. இது நம் உடலில் உள்ள செல்களை ஃப்ரீ ரேடிகல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது.
தினமும் காலையில் வால்நட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
தாவர அடிப்படையிலான ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் கிடைக்கிறது.
வைட்டமின், தாதுக்கள், ஆண்டி ஆக்ஸிடெண்ட் போன்ற ஊட்டச்சத்துகள் அதிகமுள்ளது.
தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
காலையில் வால்நட் சாப்பிடுவதால் ஏற்படும் பாதகங்கள்:
வால்நட்டில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் இருந்தாலும், இவற்றில் கலோரிகள் அதிகமுள்ளது. ஆகவே இதை அதிகமாக சாப்பிடும் போது நம் உடல் எடை அதிகரிக்கிறது.
சிலருக்கு நட்ஸ் சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளாது. அவர்கள் வால்நட் மற்றும் மரங்களில் இருந்து கிடைக்கும் நட்ஸ்களை சாப்பிடுவதை கூடுமானவரை தவிர்க்கவும்.
அளவுக்கு மிஞ்சினால் அம்ரிதமும் நஞ்சு என்பதற்கேற்ப, எவ்வுளவு தான் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அதை அளவாக எடுத்துக்கொண்டால் தான் நமக்கு பயன் தரும். உங்கள் டயட்டை மாற்றுவதாக இருந்தால் குடும்ப மருத்துவர் அல்லது தகுந்த பயிற்சி பெற்ற முறையான ஊட்டச்சத்து நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.