தாபா ஸ்டைல் ‘ஸ்பெஷல் முட்டை மசாலா’ எப்படி செய்யலாம்.? ரெசிபி இதோ..

நமக்குத் தேவையான அனைத்து வைட்டமின் சத்துகளும் நிறைந்த `உலகின் மிகச் சிறந்த உணவு வகைகளில் ஒன்று’ என்று அழைக்கப்படும் முட்டையை அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்.

அதில் மிகவும் ஸ்பெஷலானது முட்டை மசாலாதான். அதுவும் தபாக்களில் செய்யப்படும் முட்டை மசாலா அதன் தனி சுவைக்காக பெயர் பெற்றது.

அந்த தாபா ஸ்டைல் ஸ்பெஷல் முட்டை குழம்பு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

வேகவைத்த முட்டை – 6

பெரிய வெங்காயம் – 2

தக்காளி விழுது – 3

நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்

நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன்

கடலை மாவு – 2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் – 1 தேக்கரண்டி

சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 3/4 டீஸ்பூன்

கசூரி மேத்தி (உலர்ந்த வறுத்து பொடித்தது) – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

காய்ந்த சிவப்பு மிளகாய் – 2

எண்ணெய் – 3 டீஸ்பூன்

வெண்ணெய் – 1 டீஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லி இலை – 3-4 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

முட்டை வறுக்க தேவையானவை:

எண்ணெய் – 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/4 தேக்கரண்டி

செய்முறை :

மசாலாவிற்கு தேவையான வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நன்றாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

பிறகு நன்கு பழுத்த தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து கசூரி மேத்தியை போட்டு 30 வினாடிகள் வறுத்து ஆறவைத்து கரடுமுரடான பொடியாக நசுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி முட்டைகளை போட்டு வேகவைத்து அதன் ஓட்டை நீக்கி கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.

இப்போது வேகவைத்த முட்டைகளைச் அதனுடன் சேர்த்து குறைந்த வெப்பத்தில் 1-2 நிமிடங்களுக்கு பொன்னிறமாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் மற்றும் காய்ந்த சிவப்பு மிளகாய் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.

அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வெங்காயம் வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை சிறிதளவு உப்பு சேர்த்து சுமார் 8 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியவுடன் நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து குறைந்த வெப்பத்தில் மற்றொரு 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

இப்போது அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதைச் சேர்த்து நன்கு கலந்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

தக்காளி முழுவதுமாக வேகும் வரை சுமார் 5-6 நிமிடங்களுக்கு தொக்கு பதத்திற்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு சமைக்கவும்.

அதன் மசாலா வாசனை போகும் வரை மற்றொரு 2-3 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் 2 டீஸ்பூன் கடலை மாவை 2 டேபிள் ஸ்பூன் தண்ணீரில் கலந்து சேர்த்து குறைந்த வெப்பத்தில் 2-3 நிமிடங்கள் தொடர்ந்து கிளறி வதக்கவும்.

அடுத்து அதில் 200 மில்லி தண்ணீரைச் சேர்த்து அதனுடன் காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் வறுத்த கசூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் ஒரு நிமிடத்திற்கு சமைக்கவும்.

தற்போது வறுத்துவைத்துள்ள முட்டைகளைஅதில் போட்டு நன்கு கலந்து மூடி வைத்து சுமார் 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் சமைக்கவும்.

பிறகு அதனுடன் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து கலந்து மேலும் ஒரு இரண்டு நிமிடங்களுக்கு குறைந்த தீயில் வைத்து சமைத்து இறக்கவும்.

‘தாபா ஸ்டைல் முட்டை மசாலா’ தயார்…

இதை நீங்கள் சப்பாத்தி, தோசை, இட்லி, ரொட்டி அல்லது சாதத்துடன் சூடாக பரிமாறவும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *