கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இந்தியர்… விமான நிலையத்தில் தெரியவந்த அதிரவைக்கும் உண்மை
இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லி விமான நிலையம் வந்திறங்கியபோது, அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனையிட்டார்கள்.
சோதனையில் தெரியவந்த உண்மை
கடந்த மாதம், அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி, குஜராத்திலுள்ள Mehsana என்னுமிடத்தைச் சேர்ந்தவரான நிர்மல் பட்டேல் (25) என்பவர், டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவரது பாஸ்போர்ட்டை டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது பாஸ்போர்ட்டில் சில பக்கங்கள் இல்லாதது தெரியவந்துள்ளது.
நடந்தது என்ன?
ஆதாவது, அவர் தனது பாஸ்போர்ட்டிலுள்ள ஐந்து முதல் எட்டு பக்கங்களைக் கிழித்து அகற்றியுள்ளார். அத்துடன், அவர் கனடாவிலிருந்து வந்த நிலையில், அவரது கனடா விசாவையும் காணவில்லை.
ஆகவே, டெல்லி பொலிசார், பட்டேல் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டங்களின்படி மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.
சட்டவிரோதமாக புலம்பெயர்வோர், தங்களுக்கெதிரான ஆதாரங்களை அழிப்பதற்காக, இதுபோல பாஸ்போர்ட் பக்கங்கள் மற்றும் விசாவைக் கிழித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள் என்கிறார் மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர்.