சொந்த வீட்டிலேயே கைவரிசை காட்டிய பெண்: தங்கை திருமணத்திற்கான நகையை திருடியது அம்பலம்
டெல்லியில் தங்கை திருமணத்திற்காக வைத்திருந்த தங்க நகையை சொந்த வீட்டில் இருந்து சகோதரியே திருடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த வீட்டிலேயே திருடிய பெண்
டெல்லி, உத்தம் நகரின் சேவாக் பார்க் ஹோம் பகுதியில் உள்ள சொந்த வீட்டில் தங்கை திருமணத்திற்காக வைத்திருந்த நகையை சகோதரி ஒருவர் திருடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனவரி 30ம் திகதி நடந்த இந்த சம்பவத்தை தொடர்ந்து கமலேஷ் என்ற 30 வயதுடைய பெண் உத்தம் நகர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து விசாரணையை தீவிர படுத்திய பொலிஸார், தங்கையின் திருமணத்திற்காக தாய் வீட்டில் வைத்து இருந்த லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் 25,000 ரொக்க பணத்தை சுவேதா(31) என்ற பெண் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
31 வயதுடைய சுவேதா கமலேஷின் அக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
சகோதரி சொன்ன காரணம்
சுவேதாவை பொலிஸார் கைது செய்து விசாரித்த போது, தன்னுடைய தாய் தங்கை மீது மிகுந்த பாசம் கொண்டு இருந்ததால் பொறாமையில் இவ்வாறு செய்து விட்டேன் என்றும், அது போக தனக்கு சில கடன்கள் இருந்ததாலும் இதனை செய்ததாக தெரிவித்துள்ளார்.
சகோதரி கமலேஷ் வழங்கிய தகவலில், சுவேதா திருடிய நகைகளில் சில சுவேதாவிற்கு சொந்தமானதே, அவர் தான் தன் தாயிடம் நகைகளை வைத்து இருக்குமாறு வழங்கி இருந்தார் என தெரிவித்துள்ளார்.