ஜேர்மனி பல ஆண்டுகள் ரஷ்யாவுடனான மோதலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை

ஜேர்மனி பல தசாப்தங்களுக்கு ரஷ்யாவுடனான மோதலை எதிர்கொள்ள தயாராகவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார் ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர்.

ஜேர்மனி பல ஆண்டுகள் ரஷ்யாவுடனான மோதலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்
ஜேர்மனி பல தசாப்தங்களுக்கு ரஷ்யாவுடனான மோதலை எதிர்கொள்ள தயாராகவேண்டியிருக்கும் என எச்சரித்துள்ள ஜேர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சரான போரிஸ் பிஸ்டோரியஸ் (Boris Pistorius), ஜேர்மன் ராணுவத்தை வேகமாக கட்டியெழுப்பவேண்டும் என்று கூறியுள்ளார்.

உக்ரைனுடன் மோதுவதுடன் புடின் நிறுத்தமாட்டார் என்று கூறும் போரிஸ், ரஷ்ய ராணுவம் முழுமையாக உக்ரைனுடனான மோதலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளது, ஆனால், ஒப்பந்தம் ஒன்று இரு நாடுகளுக்கும் இடையில் செய்யப்படுமானால், ரஷ்ய ஜனாதிபதி புடின், நேட்டோவின் ஒற்றுமையை சோதித்துப் பார்க்க முயல்வார் என தான் கருதுவதாகத் தெரிவிக்கிறார்.

உக்ரைன் போர் நீடிக்குமா, எப்படி நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்று கூறும் போரிஸ், ஜேர்மன் ராணுவத்தின் அளவு வேகமாக அதிகரிக்கப்படவேண்டும் என்றும் ஆயுதங்களை மீண்டும் சேமிக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

விடயம் என்னவென்றால், ரஷ்யாவால் ஜேர்மனியின் பாதுகாப்புக்கு ஆபத்து வரும் என ஜேர்மன் மக்கள் கருதவில்லை.

அத்துடன், ஜேர்மனியின் பிரபலமான தலைவர்களில் ஒருவர் என்பதால், இப்படி போரிஸ் அவ்வப்போது வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துக்கொண்டிருப்பது ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் முதல் மற்ற பிற தலைவர்களுக்கே பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *