நடிகை ஶ்ரீதேவி மரண விவகாரத்தில் சிக்கிய பெண் பிரபலம்: சிபிஐ கூறும் காரணங்கள் தெரியுமா?
நடிகை ஶ்ரீதேவி மரணம் தொடர்பாக யூடியூப்பர் ஒருவரின் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஶ்ரீதேவி மரணம்
கடந்த 2018ம் ஆண்டு துபாயில் உள்ள ஹோட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவரது மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகை ஶ்ரீதேவியின் மரணத்தில் எந்தவொரு மர்மமும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இருப்பினும், நடிகை ஶ்ரீதேவி மரணம் குறித்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தை சேர்ந்த தீப்தி ஆர். பின்னிதி என்ற பெண் யூடியூபர் சர்ச்சையான பல தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
சர்ச்சை கடிதங்கள்
அந்த வகையில் யூடியூபர் பின்னிதி(youtuber pinniti) இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் கடிதங்கள் என சில ஆவணங்களை அவரது யூடியூப் சேனலில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அவர் வெளியிட்ட கடிதம் உண்மைதானா என்பதை ஆராயும் விதமாக ஆய்வு நடத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் கடிதங்கள் என கூறி போலியானவற்றை பகிர்ந்தது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் போலி ஆவணங்களை பகிர்ந்தது ஆகிய குற்றத்திற்காக யூடியூபர் பின்னிதி மற்றும் அவரது வழக்கறிஞர் பரத் சுரேஷ் காமத் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் தங்கள் தரப்பு வாதத்தை சிபிஐ பதிவு செய்யாமல் வழக்கு போடப்பட்டு இருப்பதாக யூடியூபர் பின்னிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.