இளவரசி கேட் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்: மருத்துவத்துறை நிபுணரின் கருத்து
இளவரசி கேட் சிகிச்சை முடிந்து பின் வீடு திரும்பினாலும், அவர் முழுமையாக குணமடைய ஒன்பது மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளவரசி கேட்
பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியான இளவரசி கேட், வயிற்றில் அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து சமீபத்தில் வீடு திரும்பினார்.
அவர் மீண்டும் தனது பணிகளுக்குத் திரும்புவதில் ஆர்வம் காட்டிவருகிறாராம். ஆனால், அரண்மனை வட்டாரம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மருத்துவர்களின் தற்போதைய ஆலோசனையின்படி, கேட் ஈஸ்டர் பண்டிகை முடிந்த பின்னரும் பணிக்குத் திரும்ப வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறை நிபுணரின் கருத்து
இந்நிலையில், Shashank Gurjar என்னும் வயிறு சார்ந்த அறுவை சிகிச்சைத்துறை நிபுணர், அடிவயிற்றில் பெரிய அறுவை சிகிச்சை செய்யும்போது போடப்படும் தையல், ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு நீடிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இளவரசி கேட் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாலும், அவர் தனது அன்றாடகப் பணிகளுக்காக தன் குடும்பத்தினரை சார்ந்திருக்கவேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.