வரும் 1-ம் தேதி முதல் அமலாகும் புதிய விதிகள் – என்னென்னெ தெரியுமா?
ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளிலும் பல்வேறு புதிய மாற்றங்களும் அமலாக உள்ளது குறித்து அறிவிப்புகள் வெளியாகும்.
இந்நிலையில் வரவுள்ள 2024 ஜனவரி 1ம் தேதி முதல் நாட்டில் பல்வேறு முக்கிய மாற்றங்களும் அமலாக உள்ளது. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் ஜனவரி 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் கேஒய்சி செயல்பாடுகளை மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
பயனாளர்கள் சிம்காடுகளை வாங்குவதற்கு முன்னதாக அவர்களது பயோமெட்ரிக் விவரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னரே சிம்கார்டுகள் வழங்கப்படும். 2022 – 23 ஆம் வணிக ஆண்டுக்கான வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்வதற்கு டிசம்பர் 31ஆம் தேதி உடன் கால அவகாசம் முடிவடைந்து விடும்.
அதன் பின்னர ஐ டி ஆர் தாக்கல் செய்ய முடியாது என்றும், செயல்பாடுகளை மேற்கொள்ளாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி உடன் பேங்க் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கான செயல்பாடுகள் முடிவடைந்து வடும்.
வங்கிகளுக்கான பாதுகாப்பு லாக்கர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டால் மட்டுமே லாக்கர் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.