மண் இல்லாமல் மணி பிளாண்ட் வளர்க்கலாமா? எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க

இந்தியாவில் பிரபலமான உட்புற தாவரங்களில் ஒன்று மணி பிளாண்ட். இதன் இதய வடிவிலான இலைகள் அலங்காரத்திற்கு செழுமை சேர்க்கின்ற அதே வேலை இதை வீட்டில் வளர்ப்பதால் செல்வம் பெருகும் என்ற ஒரு நம்பிக்கையும் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது.

மேலும் இந்த மணி பிளான்ட் வைப்பதால் இயற்கையான காற்று சுத்திகரிப்பு இடம்பெறுவதாகவும் அறியப்பட்டுள்ளது.

அதனை வீட்டினுள் வளக்க அனைவருக்கும் ஆசை இருந்தாலும் சிலருக்கு வீட்டினுள் மண்ணை கொண்டு வருவது பிடிக்காது மேலும் சில இடங்களில் தாவர வளர்ப்புக்கு உகந்த மண் கிடைப்பதில்லை.

இவ்வாறான சூழலில் மண் இல்லாமல் எவ்வாறு மணி பிளாண்ட் வளர்ப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மண் இல்லாமல் எப்படி வளர்ப்பது?
மணி பிளாண்டின் கிளைகளை வெட்டி வெறும் நீரில் வைத்தும் வளர்க்க முடியும். இதனை நமக்கு பிடித்த மாதிரியான பூச்சட்டிகள் அல்லது கண்ணாடி குவலைகள் என எதிலும் அரை பாகம் நீரை எடுத்து மணி பிளான்டின் கிளைகளை வெட்டி வைத்து வளர்களாம்.

நன்கு வேர் பிடித்தவுடன் அதனை வெளியில் எடுத்து ஒன்று அல்லது இரண்டு வேர்களை மாத்திரம் வைத்துவிட்டு மற்ற வேர்களை வெட்டிவிட்டு மீண்டும் நீரில் வைக்க வேண்டும்.

இந்த முறையில் மண் இன்றியே மணி பிளான்டை வீட்டில் வளர்க்க முடியும். இது வீட்டிற்கு அழகு சேர்க்கும். மேலும், மணி பிளான்ட் வாஸ்து படி, அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது, இது ஒரு உட்புற தாவரம் என்ற வகையில் மிகவும் மங்களகரமானது.

அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ வைத்துக் கொள்ளலாம். வாஸ்து சாஸ்திர கொள்கைகளின்படி, அதிர்ஷ்ட தாவரங்களை வீட்டில் வைத்திருப்பது வீட்டில் செழிப்பை உறுதி செய்வதோடு நிதி சிக்கல்களை நீக்குவதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *